முதலமைச்சர் பழனிசாமி சென்னை அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் நவீன முழு உடல் பரிசோதனை மையத்தை தொடங்கி வைத்தார்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் நவீன முழு உடல் பரிசோதனை மையத்தை  தொடங்கி வைத்தார்.

4 கோடி ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் இந்த பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கென 14 புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 1000 ரூபாய் கட்டணத்தில் அம்மா கோல்டு திட்டம், 2 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் அம்மா டைமண்ட் திட்டம் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் அம்மா பிளாட்டினம் திட்டம் என மூன்று பிரிவுகளில் முழு உடல்பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முழுரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, கல்லீரல் ரத்த பரிசோதனைகள், இருதய சுருள் படம், கர்ப்பப்பை வாய் பரிசோதனை, ரத்த கொழுப்பு பரிசோதனைகள், புரோஸ்டேட் பரிசோதனை, தைராய்டு பரிசோதனைகள் எலும்பு உறுதித் தன்மை, எண்ணியல் மார்பக சிறப்பு பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளை முழுஉடல் பரிசோதனை மையத்தில் செய்துகொள்ளலாம்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment