தமிழ்நாடு பிரீமியர் லீக்:வெளி மாநில வீரர்கள் பங்கேற்க தடை ..!உச்ச நீதிமன்றம் அதிரடி

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க அனுமதியில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. 3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

இந்த நடப்பு தொடரில் இருந்து வெளி மாநில விளையாட்டு வீரர்களை களமிறக்க T.N.P.L நிர்வாகம் முடிவு செய்தது.

இந்நிலையில் இது தொடர்பாக T.N.P.L நிர்வாகம் அனுமதி வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம்  தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க அனுமதியில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.மேலும் வெளிமாநில வீரர்களை அனுமதிக்கக் கோரிய T.N.P.L நிர்வாகத்தின் மனுவையும்  தள்ளுபடி  செய்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment