சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் QR கோடு மற்றும் புகைப்படத்துடன் கணினி முறையில் அனுமதிச்சீட்டு!

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில்,பார்வையாளர்கள் மற்றும் புகார் அளிக்க வருவோரின் நலன் கருதி, கணினி முறையில் அனுமதி சீட்டு வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

வளாக மேலாண்மை முறை என்ற இத்திட்டத்தை, சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதன்மூலம், புகார் அளிக்க வருவோர் மற்றும் பார்வையாளர்களின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, புகைப்படம் மற்றும் Q.R.Code உடன் அனுமதிச்சீட்டு விரைவாக வழங்கப்படும். Version X innovaton என்ற தனியார் நிறுவனம், இதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது.
வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் ஜெயராம், தலைமையிடத்து கூடுதல் ஆணையர் சேஷசாய், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment