கோவையில் குவியல் குவியலாகா சிக்கிய பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் !தொழிலதிபர்கள் இருவர் உட்பட 7 பேர் கைது!

வாடகைக்கு விடப்பட்ட அறையில் 60 லட்சம் மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில்  கட்டுக்கட்டாக சிக்கியது தொடர்பாக தொழிலதிபர்கள் இருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல்லைச் சேர்ந்த தஸ்தகீர் என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் கோவை பீளமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த 4ம் தேதி வாடகைக்கு ஒரு குடியிருப்பை எடுத்துள்ளார். காரில் வந்த அவர்கள், தாங்கள் கொண்டு வந்த தோல் பையை அறையினுள் வைத்துவிட்டு சென்றனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் மாற்றுச் சாவி மூலம் அறையைத் திறந்து பார்த்தபோது, அங்கு இருந்த இரண்டு பைகளில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், அறையில் இருந்து ரூபாய் நோட்டுகளை அறையிலிருந்து கைப்பற்றினர்.

இது தொடர்பாக கோவையை சேர்ந்த கிருஷ்ணகுமார், பிரசன்னா, செந்தில்குமார், நட்டராமன், பிரகாஷ், மகாலிங்கம், ரங்கராஜன் ஆகிய 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில், நாட்டார் ராமன், செந்தில்குமார் ஆகிய இருவரும்

உணவுப்பொருட்களை மொத்த விலையில் விற்பனை செய்து வருவதும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் அவர்களுடையது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அறையை வாடகைக்கு எடுத்த நாமக்கலை சேர்ந்த தஸ்தகீர் பழைய பணத்தை பெற்றுக்கொண்டு புதிய பணத்தை கொடுக்க வந்ததும், பின்னர் 35 லட்சம் ரூபாய் பழைய பணத்துடன் தப்பிச்சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தஸ்தகீர் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment