கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் பச்சை நிறத்தில் தண்ணீர்!அதிர்ச்சியில் விவசாயிகள், பொதுமக்கள் ….

விவசாயிகளும், பொதுமக்களும்கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரி ஆற்றில் பச்சை நிறத்தில் தண்ணீர் வருவதால்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளிலிருந்து திறந்து விடப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் திறந்துவிடப்படுவதால் நிற மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  கழிவுடன் கூடிய தண்ணீர் விளைநிலங்களுக்கு பாய்ச்சப்பட்டால் விளைநிலங்கள் பாழாகும் நிலை ஏற்படும் என்றும், குடிநீராக பயன்படுத்தப்படுத்தவும் காவிரி நீர் தகுதியற்றதாக மாறியுள்ளதாகவும் விவசாயிகளும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment