இவரு காலாவில் மட்டும் தான் மக்களின் இடத்தை அச்சுறுத்தி பிடுங்கும் அரசியல்வாதி,ஆனால் நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு உதவும் ஹீரோ!

நானா படேகர் காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ள நிலையில், நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு உதவும் ஹீரோ என்று புகழ்கின்றனர்.
இந்தி நடிகர் நானா படேகர் காலா படத்தில் அடித்தட்டு மக்களின் இடத்தை அச்சுறுத்தி பிடுங்கும் அரசியல்வாதியாக நடித்த நிலையில்  நிஜத்தில் அதற்கு நேர் எதிர் குணம் கொண்டவர்.
சினிமா மூலம் சம்பாதித்ததை எல்லாம் மக்களுக்காகச் செலவழித்துவிட்டு ஒற்றை பிளாட்டில் வசிக்கிறார். மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் 2015ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. விவசாய நிலங்கள் வெடித்தன.
ஆடுமாடுகள் செத்து மடிந்தன. விவசாயிகள் கொத்துக்கொத்தாக தற்கொலை செய்துகொண்டனர். விவசாயிகளின் தற்கொலை நானா படேகரின் மனதை வெகுவாகப் பாதித்தது. சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து நாம் என்னும் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார்.
முதல் நாளே அறக்கட்டளைக்கு 80 லட்சம் ரூபாய் கிடைத்தது. ஒரே வாரத்தில் 7 கோடி ரூபாய் திரண்டது. இரவு பகலாக விவசாயிகளை நேரில் சந்தித்து இந்த நிதியை வழங்கினார்.மும்பை, தானே, புனே, நாக்பூர், அவுரங்கபாத் நகரங்களில் ‘நாம்‘ அறக்கட்டளை தற்போது இயங்கிவருகிறது. கணவரை இழந்த பெண்களுக்கு மறு வாழ்க்கை அமைத்துக்கொடுப்பது. இளம் பெண்களுக்கு சுய தொழில் கற்றுக் கொடுப்பது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது போன்ற பல்வேறு அறப்பணிகளில் இந்த அமைப்பு ஈடுபடுகிறது. நானா படேகரை நிஜ ஹீரோ என்று புகழ்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment