அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மம்தா பானர்ஜி!18 சதவீத அகவிலைப்படி உயர்வு!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அதிகரித்து  மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அம்மாநிலத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் எந்த சலுகையும் இடம்பெறாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பள்ளி ஊழியர்கள் உள்பட மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 18 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி வழங்கப்படுவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களை கவரும் முயற்சியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படும் நிலையில், சரியாக திட்டமிட்டு செயல்படுவற்காக முன்கூட்டியே அறிவித்ததாக மம்தா விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment