கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் என்னென்ன.?

நமக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது ஏதாவது ஒன்றை பற்றி தெரியவில்லை

By Dinasuvadu desk | Published: Mar 19, 2018 11:08 AM

நமக்கு ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது ஏதாவது ஒன்றை பற்றி தெரியவில்லை என்றால்,  கூகுளிடம் கேட்க்கும் காலம் இது. முன்பெல்லாம் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் அறிய என்சைக்லோபிடியாவை புரட்டியது போய், மொபலை எடுத்து கூகுளை கேட்டு விடுகிறோம். யாஹூ, பிங் என பல தேடுபொறிகள் இருந்தாலும், கூகுளை அதிகம் பயன்படுத்த காரணம் அதன் எளிமை யான வடிவமைப்பு மற்றும் துல்லியமான பதில்களே. உலகின் மிகப்பெரிய சமூகவலைதளமான பேஸ்புக், உலகத்தை சுருக்கி உள்ளங்கையில் வைத்தது போல், எந்த மூலையில் என்ன நடந்தாலும் உடனுக்குடன் அனைவருக்கும் சென்று சேர்க்கிறது. என்னதான் மொபைல் செயலிகள் மூலம் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டாலும், கூகுளில் தேடும் வார்த்தைகளில் முதலிடமும் இதற்கு தான். மாதத்திற்கு சராசரியாக 214கோடி தடவை கூகுளில் தேடப்படுகிறதாம் பேஸ்புக். பெரும்பாலும் வீடியோக்கள் பார்ப்பதற்கு பல்வேறு தளங்கள் இருந்தாலும், எல்லா விதமான வீடியோக்களையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு யூடியூப் மட்டுமே உள்ளது. எனவே, யூடியூப் மாதம் சராசரியாக 168கோடி தேடல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதிலும் உலகத்திலேயே அதிகமாக யூடியூப் பார்ப்பதில் 3ம் இடம் தமிழ்நாட்டு தான்! என்னதான் கூகுள் க்ரோம் உலாவி மற்றும் கூகுள் செயலிகளின் முகப்பு பக்கத்திலேயே கூகுள் தேடுபொறி இருந்தாலும், அதிலும் கூகுளை தேடி "Google.in" சென்று நமக்கு தேவையான ஒன்றை தேடுவது தானே நம்ம பழக்கம்! அதனால் தான் 92 கோடி தேடல்களுடன் மூன்றாம் இடம். என்னதான் பேஸ்புக் மெசஞ்சர் , வாட்ஸ்ஆப் என செயலிகள் வந்தாலும், மின்னஞ்சலுக்கான மவுசு இன்னும் குறையவில்லை. மற்றவற்றை காட்டிலும் இது மிகவும் பாதுகாப்பானது மட்டுமின்றி, அனைத்து தளங்களிலும் பயன்படுத்த எளிதானது. அலுவலக ரீதியாக மின்னஞ்சல் அனுப்ப யாஹூ, அவுட்லுக் என நிறைய இருந்தாலும் ஜிமெயில் தான் டாப். மாதம் சராசரியாக 50கோடி தேடல்களாம்.
Step2: Place in ads Display sections

unicc