மது அருந்திவிட்டு பணியாற்றினால் பணிநீக்கம் – போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

மது அருந்திவிட்டு பேருந்து இயக்குவது கண்டறியப்பட்டால் பணி நீக்கம் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநர் உடன் நடத்துநர்களில் சிலர் தங்களது பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரிவதாக புகார் பெறப்படுகிறது. மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும். மது அருந்திய நிலையில் பயணிகளிடையே நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதுடன், பயணிகளுக்கு நமது கழகத்தின் மீதான நம்பிக்கை குறைவதுடன் தொடர்ந்து … Read more

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்

கூடுதல் கட்டணம் வசூல் செய்ய கூடாது என போக்குவரத்து துறை சார்பில் எச்சரிக்கை. தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்வதாக இன்று காலையில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், ஆர்.டி.ஓ. தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். … Read more

#JustNow: இவற்றில் கட்டாயம் கேமரா பொருத்தப்படும் – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு. அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளி, கல்லூரி வாகனத்தில் கேமரா கட்டாயம் பொருத்தப்படும் என்றும் பள்ளி, கல்லூரி வாகனத்தில் கேமரா பொருத்துவதற்கான ஆய்வும் கூடிய விரைவில் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், பள்ளி, … Read more

#BREAKING : ஊரடங்கு நீட்டிப்பு…! 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி…!

ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி … Read more

#BREAKING : போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு…! டாஸ்மாக், சலூன் மற்றும் தேநீர் கடைகள் அனுமதி இல்லை…!

தமிழகத்தில் ஜூன்-14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. ஜூன் 14-ம் தேதி போக்குவரத்துக்கு  தடை நீடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக், சலூன் மற்றும் தேநீர் கடைகள் செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில், ஜூன்-7ம் தேதியுடன்  ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது. இந்நிலையில், தற்போது இது ஊரடங்கு … Read more

சென்னையில் பஸ், ரயில் இயக்க கூடாது.! வயதானவர்களை பாதுகாக்க வேண்டும்.!

சென்னையில் தளர்வுகள் தரக்கூடாது என்றும் பொது போக்குவரத்துக்கு பஸ் ரயில்களை இயக்க கூடாது எனவும் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், ஊரடங்கை நீடிப்பதா? இல்லை தளர்வு செய்யலாமா? என்பதை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் இன்று காலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்தபின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவ குழு பிரதிநிதியான ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா அதிக பாதிப்பு … Read more

புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கம் – தமிழக பகுதியில் ஏற, இறங்க தடை.!

புதுவையிலிருந்து இருந்து தமிழகத்தின் 2 மாவட்டங்களை கடந்து காரைக்கால் பகுதிக்கு புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் சேவை தொடங்கியது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கில் பல தளர்வுகளை புதுச்சேரி அரசாங்கம் அறிவித்தது. அதில், குறிப்பாக மதுக்கடைகள் மற்றும் புதுச்சேரிக்குள் பேருந்துகளை இயக்குவது என அறிவிக்கப்பட்டு நேற்று முதல் உள்ளூர் பேருந்துகள் பல்வேறு வழிதடங்களில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை மாநிலத்தின் ஒரு பகுதியான … Read more

பஸ் பயணம் தொடர்பாக பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி!

பஸ் பயணம் தொடர்பாக பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பராவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சுவாமி, ஊரடங்கு முடிந்த பின்னர், அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும், ஓட்டுனர், நடத்துனர், பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட … Read more

கேரளாவில் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அமைச்சர் சுசீந்திரன்

கேரளாவில் பொது போக்குவரத்துக்காக பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படவில்லை.  இந்நிலையில், கேரளா போக்குவரத்துத்துறை அமைச்சர் சுசீந்தரன்  அவர்கள், கேரளாவில் பொது போக்குவரத்துக்காக பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா அதிகம் இல்லாத பகுதிகள் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் … Read more

பஸ், ரயிலை இயக்கலாம் – எடியூரப்பா அதிரடி அறிவிப்பு.!

கர்நாடகாவில் பஸ், ரயிலை இயக்க அனுமதி என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்து உள்ள நாடு முழுவதுமான 3-ம் கட்ட ஊரடங்கு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், வரும் 31ம் தேதி பொது முடக்கத்தை நீட்டிப்பு செய்துள்ளது. இந்த நான்காவது கட்ட ஊரடங்கிற்கான விரிவான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும், சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலங்கள் … Read more