புதிய இந்தியாவில் தமிழ்நாடு இருக்காது – வைகோ

எந்தவொரு விபரீதமான முடிவும் ஒரு எதிர்வினையை உருவாக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளார் வைகோ தெரிவித்துள்ளார். புதிய இந்தியாவில் தமிழ்நாடு இருக்காது என்று கூறியுள்ளார்.  சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  தேசியகீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்க வேண்டியதில்லை .அமைதியாக இருந்தால் போதும் என்றும் காந்தி கூறியுள்ளார். எந்தவொரு விபரீதமான முடிவும் ஒரு எதிர்வினையை உருவாக்கும்.ஆர்.எஸ்.எஸ்   -இன் கொள்கைகளை ஒவ்வொன்றாக பாஜக நிறைவேற்றி வருகிறது. … Read more

குடியுரிமை மசோதாவை கடலில் வீசுங்கள் – வைகோ ஆவேசம்

மாநிலங்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.  குடியுரிமை சட்ட திருத்த முன்வரைவை வங்காள விரிகுடா கடலில் தூக்கி வீசுங்கள் என்று மாநிலங்களவையில் வைகோ ஆவேசமாக பேசியுள்ளார்.  மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டுவர முடிவு செய்தது.இதனால் இந்த மசோதா முதலில் நாடாளுமன்றத்தின் அவைகளில் ஒன்றான மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.ஆனால் இந்த மசோதாவிற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால் வாக்கெடுப்பின் போது மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் … Read more

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு : ஜனநாயக படுகொலை – வைகோ கண்டனம்

தமிழகத்தில்  மூன்று வருடங்களுக்கு மேலாக தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது .ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்,உள்ளாட்சித்தேர்தல் என்பது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் … Read more

இலங்கை தமிழர் விவகாரம் : வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் – அமைச்சர் ஜெயக்குமார்

இலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் போடுகின்றார் என்று மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் போடுகின்றனர் .இலங்கை தமிழர் நலனை பாதுகாப்பதில் அதிமுக அரசு முனைப்பாக செயல்படும் . ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் அரியணை ஏற ஆசை இருக்கும், நடிகர்கள் தங்களது கருத்துக்களை சொல்லலாம்.எங்கள் மீது கல்லெறிந்தால், … Read more

உள்ளாட்சி தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி தொடரும் – வைகோ

உள்ளாட்சி தேர்தலில் திமுக உடன் மதிமுக கூட்டணி தொடரும்  என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நீர்மேலான்மை விசயத்தில் தமிழக அரசு குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது . கர்நாடகம் தென்பெண்ணையில் 70 சதவீத அணை கட்டும் பணிகளை முடித்துவிட்டது. இது குறித்து தமிழக அரசு தீர்பாயத்தை அனுகாதது ஏன் என நீதிமன்றமே கேள்வி எழுப்பியது அது போல மேகதாது, ஹைட்ரோ கார்பன் என பல பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே … Read more

வெற்றிடத்தை நிரப்பிவிட்டார் ஸ்டாலின் -வைகோ

வெற்றிடத்தை நிரப்பிவிட்டார் ஸ்டாலின் என்று  வைகோ தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு அரசியல் கட்சியினர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,  வெற்றிடம் என்பது அறிவியல் பூர்வமாக இல்லை.வெற்றிடத்தை காற்று நிரப்பி கொண்டே இருக்கும். கருணாநிதி மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை … Read more

திருக்குறள் நெறியை அடக்க நினைத்தால் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள் – வைகோ

திருக்குறள் நெறியை  அடக்க நினைத்தால் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள் என்று  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் . பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தில்  அந்நாட்டு மொழியில் திருக்குறளை வெளியிட்டார் .இதனால் தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில்,திருவள்ளுவர் படத்தை காவி உடை, நெற்றியில் விபூதியுடன் பதிவிடப்பட்டது.இந்த பதிவிற்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், திருக்குறள் நெறியை இந்துத்துவ ‘சிமிழுக்குள்’ அடக்க நினைக்கும் … Read more

வைகோவும் ரஜினியை போல ஆன்மீக அரசியலை பின்பற்ற தொடங்கிவிட்டார் – கராத்தே தியாகராஜன்

வைகோவும் ரஜினியை பின்பற்றி ஆன்மீக அரசியலை பின்பற்ற தொடங்கிவிட்டார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ,மதிமுகவினர் பெரும்பாலும் இந்துகள் என்று கூறினார் .மேலும் கோயில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளேன் என்று  வைகோ கூறியிருந்தார்.இந்த நிலையில் கராத்தே தியாகராஜன் வைகோவும் ரஜினியை பின்பற்றி ஆன்மீக அரசியலை பின்பற்ற தொடங்கிவிட்டார் என்று கூறியுள்ளார். இது குறித்து கராத்தே தியாகராஜன் சென்னையில் கூறுகையில்,ரஜினி இந்துத்துவாவை பின்பற்ற சொல்லவில்லை, இந்து கோயில்களைத்தான் கும்பிட சொன்னார்.ரஜினி அரசியலுக்கு வருவது … Read more

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு முற்றாக கைவிட வேண்டும் – வைகோ

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு முற்றாக கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் திட்டமிடப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு முற்றாக கைவிட வேண்டும். மக்களின் அறப்போராட்டத்தை அலட்சியப்படுத்திவிட்டு, இதுபோன்ற நாசகார திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தால், தன்னெழுச்சியான வெகுமக்கள் திரள் போராட்டங்கள் வெடிப்பதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என எச்சரிக்கிறேன் என்று  வைகோ தெரிவித்துள்ளார்.

ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த மனு தள்ளுபடி !

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக்கோரி வைகோ சார்பில் ஆட்கொணர்வு … Read more