விஸ்வாசம், கைதி, காப்பான் பட முக்கிய நடிகர் திடீர் மரணம்.!

விஸ்வாசம், காப்பான் ஆகிய படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் விஸ்வாசம், காப்பான் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர் மனோகர் அவர்கள். இவர் நகுல் நடித்த மாசிலாமணி எனும் திரைப்படத்தையும், நந்தா நடித்த வேலூர் மாவட்டம் எனும் திரைப்படத்தையும் இயக்கியும் உள்ளார். ஆர்.என்.ஆர்.மனோகர், திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.மனோகர் அவர்களின் சகோதரர் ஆவார். இவர் இன்று உடல் நலக்குறைவு காரணமாக இன்று … Read more

சூர்யாவின் காப்பான் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, சூர்யா ரசிகர்களின் அட்டகாசமான செயல்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில், நடித்துள்ள திரைப்படம் காப்பான். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இப்படம் பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகும் போது, ரசிகர்கள் பேனர் அடித்து மிக பிரமாண்டமாக கொண்டாடுவது உண்டு. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பேனர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தால், அனைத்து நடிகர்களும் தங்களது ரசிகர்களிடம் பேனர் … Read more

சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர்   இயக்கத்தில், காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் செப்.20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஜான் சார்லஸ் என்பவர் காப்பான் படத்தின் கதை தன்னுடையது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, இந்த உததரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த … Read more

எனது படத்தில் வேண்டுமானால் அரசியல் இருக்கலாம்! எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளி கூட கிடையாது : நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் இவர் நடித்துள்ளார். இப்படத்தில், மோஹன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் செப்.20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நடிகர் சூர்யா அளித்த பேட்டியில், சமூகத்தில் நடந்து கொண்டு இருக்கும் இதுவரை பதிவு செய்யாத களம் கிடைத்தால் உடனே ஒப்புக்கொள்வேன் என்றும் அப்படி அமைந்தது காப்பான் படம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் … Read more

மாறிப்போன ரிலீஸ் தேதிகள்! தள்ளிப்போகும் சாஹோ! முன்பே வரும் காப்பான்!

தமிழ் சினிமாவில் அடுத்த மாதம் ஆரம்பித்தது முதல் பெரிய திரைப்படங்கள் வரிசையாக ரிலீசிற்கு காத்திருக்கின்றன. அதில் முதலில் வருவது அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை அடுத்து சாஹோ படம் தான் ஆகஸ்ட் 15இல் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் படத்தின் வேலைகள் இன்னும் முடியாததால், படம் ஆகஸ்ட் 30க்கு தள்ளிப்போனது. ஆதலால், முழுவதும்  ரெடி ஆகி, ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட காப்பான் படம் … Read more

எதையும் விளம்பரத்திற்காக பண்ண வேண்டாம் : நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியுள்ளார். அப்போது அவர், எடுக்கும் முயற்சிகள் தவறலாம். ஆனால் விடா முயற்சியை தவற வீடாக கூடாது என்றும், நான் நிஜ வாழ்வில் நான் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் என … Read more

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான என்.ஜி.கே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யா தற்போது காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மோகன்லால் பிரதமராக நடிக்கிறார். நடிகர் சூர்யா பிரதமரை பாதுகாக்கும் பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின், ‘சிறுக்கி’ பாடல் சமீபத்தில் … Read more

மீண்டும் சிங்கம் கூட்டணியில் நடிக்க உள்ளாரா சூர்யா?!

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே எனும் அரசியல் படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் எனும் அதிரடி ஆக்ஷ்ன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் சிங்கம் படங்களை இயக்கிய ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்றும் அந்த படத்த ஏ.வி.எம் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும் திடீரென இணையத்தில் செய்திகள் பரவி வந்தன. ஆனால் சூர்யா … Read more

செல்வராகவன் இயக்கும் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ மீண்டும் மீண்டும் தள்ளிப்போகிறது! வருத்தத்தில் ரசிகர்கள்!!!

சூர்யா நடிப்பில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் என்.ஜி.கே. இந்த படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இந்த பட ஷூட்டிங் வெகு நாட்களாக நடந்து வருகிறது. ஆதலால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் மாறிக்கொண்டே இருக்கிறது. முதலில் இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவித்திருந்தது. பிறகு ஷூட்டிங் நிறைவடையாத காரணத்தால்  டிசம்பருக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் அந்த மாதத்தில் நிறைய படங்கள் போட்டி போட்டதாலும், இப்பட வேலைகள் முடியாததாலும் ஜனவரி இறுதி என கூறப்பட்டது. தற்போது வெளியான … Read more

கோடை விடுமுறையில் பிரமாண்ட கூட்டணியுடன் ‘காப்பான்’-ஆக வருகிறார் சூர்யா!!!

  தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரானவர் சூர்யா. இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. இதன் ரிலீஸ் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும். இந்த படத்தினை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கதில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை லைகா தயாரித்து வருகிறது. இந்த படத்தின் பெயர் புத்தாண்டை முன்னிட்டு … Read more