மீண்டும் சிங்கம் கூட்டணியில் நடிக்க உள்ளாரா சூர்யா?!

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே எனும் அரசியல் படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் எனும் அதிரடி ஆக்ஷ்ன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து மீண்டும் சிங்கம் படங்களை இயக்கிய ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்றும் அந்த படத்த ஏ.வி.எம் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்றும் திடீரென இணையத்தில் செய்திகள் பரவி வந்தன.

ஆனால் சூர்யா மேற்கண்ட இரண்டு படங்களின் வேலைகளை மார்ச்சில் முடித்து விட்டு அடுத்ததாக இறுதிசுற்று பட இயக்குனர் சதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவம் அந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்க உள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது. உண்மை தகவல் வெளியாகும் வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment