சிக்ஸர் அடிப்பாரா எடியூரப்பா?! கர்நாடக இடைதேர்தல் முன்னிலை நிலவரம்!

கர்நாடக சட்டப்பேரவையில் 15 தொகுதிகளின் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  இதில் 6 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் பாஜக உள்ளது.  கர்நாடக சட்டப்பேரவையில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டப்பேரவையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மீதம் உள்ள இரண்டு தொகுதிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு … Read more

கர்நாடகாவில் மேலும் 2  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா

கர்நாடகாவில் மேலும் 2  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.நாகராஜ் மற்றும் சுதாகர் ஆகிய இரு எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் மற்றும்   மதச்சார்பற்ற ஜனதா தள  3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

காங்கிரஸ் அமைச்சர்களை தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகினர். கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் தான் ஆகும்.இதனால் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள  அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. பின் காங்கிரஸ் கட்சியின் 21 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.ராஜினாமா செய்த எல்எல்ஏக்களுக்கு பதவி வழங்கி ராஜினாமாவை திரும்பப்பெற செய்யும் … Read more

கவிழ்கிறதா குமாரசாமி ஆட்சி !11 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா !

கர்நாடகாவில்  11 காங்கிரஸ் – ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்கள்  சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதனால் பாஜக சார்பில் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிருபிக்க முடியாத நிலையில் வெளியேறினார். நீண்ட குழப்பத்துக்குப் பிறகு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதவுடன் முதல்வராக பதவியேற்றார். சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார். பெரும்பான்மைக்கு 111 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 117 உறுப்பினர்களின் ஆதரவு குமாரசாமிக்கு இருந்தது.இதனால் முதலமைச்சராக … Read more

” தேவகவுடா இறந்துவிடுவார் ” பிஜேபி_யினரை ஓட ஓட விரட்டியடித்த JD(S) தொண்டர்கள்…!!

கர்நாடகாவில்  JD(S)+காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து பிஜேபி முயற்சி செய்து வருகின்றது. பாஜக M.L.A பிரீத்தம் கவுடா தேவகவுடா விரைவில் இறந்து விடுவார் என்றது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் மதற்சார்பற்ற ஜனதா தளம் JD(S)+காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றது.கர்நாடக மாநில முதல்வராக முன்னாள் பிரதமர் தேவகவுடா_வின் மகன் குமாரசாமி இருக்கின்றார்.இந்த கூட்டணி ஆட்சியை எப்படியாவது கலைத்துவிட வேண்டுமென்று பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.சமீபத்தில் கர்நாடக எடியூரப்பா M.L.A_க்களை பேரம் பேசும் ஆடியோ_வை … Read more