மற்றொரு வேட்பாளர் பட்டியல்! குஜராத்தில் இருந்து எம்பியாகிறார் ஜே.பி.நட்டா!

jp nadda

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக, 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில், மாநிலங்களவை தொகுதிகள் காலியாக உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் தங்களது வேட்பாளர்களை பாஜகவும், காங்கிரஸும் அறிவித்து வருகிறது. அந்தவகையில், இன்று காலை மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை  பாஜக தேசிய தலைமை வெளியிட்டது. இதில் குறிப்பாக, மீண்டும் ம.பி.யில் இருந்து … Read more

பில்கிஸ் பானு வழக்கு: சிறையில் சரணடைய 11 பேரில் 9 பேர் தலைமறைவு.?

Bilkis Bano case

பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சிறையில் சரணடைய உச்ச நீதிமன்றம் தீர்ப்புயளித்துள்ள நிலையில், 9 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  இதற்கிடையில் 11 குற்றவாளிகளும் கடந்த 2022-ஆம் … Read more

பில்கிஸ் பானு நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

STALIN - Bilkis Bano

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் … Read more

பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Bilkis Bano case

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி கூட்டு … Read more

உலக சாதனை படைத்த குஜராத்.! வியந்து பாராட்டிய பிரதமர் மோடி.!

PM Modi appreciate Gujarat

குஜராத்தில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்ததற்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்த நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை குஜராத்தில் 108 இடங்களில், 51 வெவ்வேறு குழுவினர்கள் மூலம் 4,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் சூரிய நமஸ்காரத்தை செய்தனர். ஆரோக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. பிரம்மாண்டமான மோதேரா, சூரியன் கோவிலில் இந்த சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள், யோகா ஆர்வலர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் … Read more

அமெரிக்காவுக்கு சட்டவிரோத குடியேற்றம்… 21 குஜராத்தியர்களுக்கு சிக்கல்… ஏஜென்ட்களுக்கு வலைவீச்சு.!

Illegal immigration - 21 Gujarat Passengers

கடந்த வியாழன் அன்று ஐக்கிய அரபு நாட்டில் இருந்து அமெரிக்காவில் உள்ள நிகரகுவா எனும் இடத்திற்கு 303 பயணிகள் உடன் தனியார் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 303 பயணிகளில் 299 பேர் இந்தியர்கள் என்றும், 11 சிறார்கள் அந்த விமானத்தில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த விமானமானது எரிபொருள் நிரப்பும் பொருட்டு பாரிஸில் இருந்து 150 கிமீ தொலையில் வத்ரி எனும் விமான நிலையத்தில் நின்றுள்ளது. அப்போது அந்த விமானநிலைய அதிகாரி பயணிகளின் … Read more

குஜராத்தில் இங்கு மட்டும் ‘மது’ அருந்தலாம்.! அரசு அறிவிப்பு.. காங்கிரஸ் எம்பி கடும் விமர்சனம்.!

Gift City - Congress MP Shaktisinh Gohil

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு, எங்கும் மது அருந்த, விற்க அனுமதி இல்லை. இப்படியான சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை காந்திநகர் மாவட்டத்தில் உள்ள குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியில் எனும் கிஃப்ட் சிட்டி (Gift City) அமைந்துள்ளது. அந்த இடத்திற்கு வரும் பொதுமக்கள் ஒயின் உள்ளிட்ட குறிப்பிட்ட வகை மதுபானங்களை அருந்த அனுமதி வழங்ப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது – சுகாதாரத்துறை அமைச்சர்.! இந்த மது அருந்தும் சேவையானது … Read more

குஜராத்தில் போலி சுங்கச் சாவடி மூலம் கோடிக்கணக்கில் மோசடி… தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு!

Fake Toll Plaza

குஜராத்தில் போலி சுங்க சாவடி அமைத்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை ஏமாற்றி ரூ.75 கோடி மோசடி செய்தது தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள பாமன்போர்-கட்ச் தேசிய நெடுஞ்சாலையில், தனிநபர்கள் குழு ஒரு வருடத்திற்கும் மேலாக போலி சுங்க சாவடி அமைத்து மோசடி செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தனியார் நிலத்தில் நெடுஞ்சாலையை புறக்கணித்து போலி சுங்கச்சாவடி அமைத்து ஓராண்டுக்கு மேலாக அரசு … Read more

அடுத்த 25 ஆண்டுகளில், நமது இந்தியாவை நாம் செழிப்பாக மாற்ற வேண்டும்.! பிரதமர் மோடி பேச்சு.!

PMModi

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 148 வது பிறந்த நாள் ஆனது இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் நர்மதாவில் உள்ள ஏக்தா நகரில் இருக்கும் வல்லபாய் படேலின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த சிலை ஒற்றுமையின் சிலை என்றும், இந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மாநில … Read more

ரூ.800 கோடி… சிக்கிய ஹெராயின் பாக்கெட்டுகள்.! குஜராத் போலீசார் தேடுதல் வேட்டை.! 

Gujarat beach

குஜராத் மாநிலம் காந்திதாம் துறைமுகத்தில் இருந்து 30 கிமீ தொலைவில், ராஜ்கோட் மாவட்டத்தில் மிதி ரோகர் கட்ச் கிராமத்தின் கடற்கரையில் போதை பொருள் சிதறி கிடப்பதாக அங்குள்ள போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து, காவல்துறையினர் நடத்திய சோதனையில் பல்வேறு பாக்கெட்டுகளில் ஹெராயின் என்பதும் போதை பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதாவது, மொத்தமாக 80 பாக்கெட்டுகளில் ஒரு பாக்கெட்டுக்கு 1 கிலோ வீதம் சுமார் 80 கிலோ ஹெராயின் போதைப்பொருள்கள் கிடைத்துள்ளது. இதன் மத்திப்பு சுமார் 800 … Read more