மக்களவை தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்..! திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து

Congress: மக்களவை தேர்தலில் திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. Read More – எய்ம்ஸ் போல் சின்னப்பிள்ளைக்கு வீடும் வரவில்லை: மத்திய அரசின் மீது அமைச்சர் உதயநிதி விமர்சனம் ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கொமதேக, ஐயுஎம்எல், மநீம உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்தது. … Read more

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி

Geetha Shivrajkumar: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நிலையில் கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் ஷிமோகா போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் இன்று  அறிவித்தார். இன்று வெளியிடப்பட்டுள்ள 39 வேட்பாளர்களில் 12 வேட்பாளர்கள் 50 வயதுக்கும் குறைவானர்கள் ஆவர், 7 வேட்பாளர்கள் 71ல் இருந்து 76 வயதில் உள்ளவர்கள். மற்ற 20 வேட்பாளர்கள் … Read more

மக்களவை தேர்தல்..! காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியல்.. ராகுல்காந்தி மீண்டும் வயநாட்டில் போட்டி

Congress: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தேதியானது வெகுவிரைவில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் ஆளும் பாஜக கட்சி அண்மையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் 195 பேர் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் … Read more

ரூ.65 கோடி வரியை வருமானவரித்துறை வசூலிக்க காங்கிரஸ் எதிர்ப்பு! மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பாயம்

Congress: வருமானவரித்துறை, ரூ. 65 கோடி வரிபாக்கியினை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வசூலிப்பதற்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் மனுவை வருமான வரித்துறை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த ரூ. 210 கோடி ரூபாய் பணம், வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது. இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் முறையிட்டது. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு முடக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது. … Read more

நாடாளுமன்ற தேர்தல்: 11 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த சமாஜ்வாடி கட்சி

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இடையே, உத்தரபிரதேச மாநிலத்தில் 11 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கவுள்ளது. இதில் ‘இந்தியா’ கூட்டணியில் சமாஜ்வாடி கட்சி அங்கம் வகிக்கிறது. இப்படியான சூழலில், நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாடி கட்சி கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியிட்டது. 16 பேர் கொண்ட பட்டியல் அன்றைய … Read more

ஆளுநர் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் – காங்கிரஸ்

rn ravi

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் நேற்று சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால், அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ஆளுநர் உரையை சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநரின் செயலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய குறிப்புகள் அவைக் குறிப்பில் இடம்பெறாது என சபாநாயகர் தெரிவித்தார். மேலும், ஆளுநர் உரையை படிக்காமல் … Read more

காங்கிரஸ் 10 ஆண்டு ஆட்சியின் தவறான நிர்வாகம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: பாஜக அரசு

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார நிர்வாக சீர்கேடு மற்றும் தவறான நிர்வாகம் குறித்து மோடி அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டு கால ஆட்சியில் (2004 – 2014) பொருளாதாரம் எப்படி இருந்தது என்பது குறித்த வெள்ளை அறிக்கையாக இது வெளியாகவுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்படுகிறது, அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளதாக பல்வேறு … Read more

கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் தரக்கூடாது..! காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கட்சியின் ஒரு தரப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர்கள் சுதர்சன நாச்சியப்பன், K.R ராமசாமி உள்ளிட்டோர் முன்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியாக காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் பதவி வகிக்கும் நிலையில் அவர் அவ்வபோது மோடியை புகழ்வதாகவும், காங்கிரசின் முடிவுகளுக்கு எதிராக பேசுவதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்புகள் … Read more

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் வெல்ல முடியுமா? மம்தா பானர்ஜி கடும் தாக்கு

காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். ’இந்தியா’ கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இடம்பெற்ற நிலையில் மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அண்மையில் அறிவித்தார். இந்த நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அவர் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதன்போது நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசும் போது, “காங்கிரஸ் கட்சியிடம் 300 தொகுதிகளில் … Read more

தொடரும் பொய் செய்திகள்..! பாஜக சமூக வலைதள பக்கங்களை முடக்க  வேண்டும்.! காங்கிரஸ் புகார்.!

Congress complaint about BJP Social media pages

கடந்த புதன்கிழமை (டிசம்பர் 13) அன்று பாராளுமன்றத்தில் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இரண்டு பேர் மக்களவையில் குதித்து வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தி கோஷமிட்டனர். அதே போல நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கோஷமிட்டனர். இதனை அவர்களது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்தார் இப்படி இந்த வழக்கின் கீழ் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் இருவர் குதித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. அதனை எடிட் செய்து அதில் காங்கிரஸ் எம்பி … Read more