ரூ.65 கோடி வரியை வருமானவரித்துறை வசூலிக்க காங்கிரஸ் எதிர்ப்பு! மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பாயம்

Congress: வருமானவரித்துறை, ரூ. 65 கோடி வரிபாக்கியினை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வசூலிப்பதற்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் மனுவை வருமான வரித்துறை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி காங்கிரஸின் முக்கிய வங்கிக் கணக்குகளிலிருந்த ரூ. 210 கோடி ரூபாய் பணம், வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது.

இதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் முறையிட்டது. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு முடக்கத்தை தற்காலிகமாக ரத்து செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தொடர்ந்து காங்கிரஸின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.65 கோடி வரி நிலுவைத் தொகையை வருமான வரித்துறை பிடித்தம் செய்தது.

Read More – ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு விபத்து… தலைமையிடம் இதுவா.? முக்கிய நபரிடம் NIA தீவிர விசாரணை.!

இந்த நிலையில் வருமான வரித்துறை, ரூ. 65 கோடி பணம் வரி பாக்கியினை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வசூலிப்பதற்கு எதிரான காங்கிரஸ் கட்சி மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் மனுவை தள்ளுபடி செய்து வருமான வரித்துறை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment