வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்! மிரட்டலாக வெளியான ‘குபேரா’ பர்ஸ்ட் லுக்!

D51FirstLook நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தினை இயக்கி நடித்து முடித்து இருக்கும் நிலையில் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 51-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக D51 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

READ MORE- அந்த நடிகருடன் காதலில் விழுந்தாரா நடிகை ரிது வர்மா?

படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். நாகார்ஜுனா அக்கினேனி, ஜிம் சர்ப் உள்ளிட்ட சில பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

READ MORE – என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

இதற்கிடையில், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்புடன் சிவராத்திரியை முன்னிரு அறிவிக்கப்படும் என முன்னதாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த திரைப்படத்திற்கு குபேரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more- மம்முட்டியை ஓரங்கட்டி ரூ.100 கோடி வசூலித்த மஞ்சும்மெல் பாய்ஸ்! மலையாளத்தில் புதிய சாதனை…

பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவுடன் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்றே கூறலாம். அந்த அளவிற்கு வித்தியாசமான லுக்கில் தனுஷ் இருக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியான உடனே இந்த படம் அரசியல் கதையம்சம் கொண்ட படம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. எனவே, படம் எந்த மாதிரி கதையம்சம் கொண்ட படம் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment