மம்முட்டியை ஓரங்கட்டி ரூ.100 கோடி வசூலித்த மஞ்சும்மெல் பாய்ஸ்! மலையாளத்தில் புதிய சாதனை…

Manjummel Boys: இயக்குனர் சிதம்பரத்தின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதன் மூலம், மலையாள சினிமாவில் ரூ.100 கோடி வசூலித்த 4வது திரைப்படமாக மஞ்சும்மல் பாய்ஸ் மாறியுள்ளது. இதற்கு முன்னதாக, 2016-ல் வெளியான மோகன்லாலின் ‘புலி முருகன்’ முதல் 100 கோடி வசூலித்த திரைப்படமாக உள்ளது.

READ MORE – ஆள விடுங்கப்பா சாமி! கமல்ஹாசன் படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்?

அதற்கு அடுத்தபடியாக, ‘லூசிபர்’ (2019) படமும், மூன்றாவது டோவினோ தாமஷின் 2018 திரைப்படம் (2023) படம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் வெற்றி கேரளாவைத் தாண்டி, பிற மொழிகளிலும் கூட பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் வசூலையும் குவித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் உற்சாகமான வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படம் 100 கோடி கிளப்பில் விரைவாக நுழைவதற்கு பங்களிப்பை அளித்துள்ளது என்றே சொல்லாம்.

READ MORE – தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்! யார் யாருக்கு என்னென்ன விருது?

இதில், இன்னோரு விஷயம் என்னவென்றால், மம்முட்டியின் ‘பிரம்மயுகம்’ படத்தை கூட இந்த படம் பீட் செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். பிரம்மயுகம் இதுரை ரூ.60 கோடியை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், அந்த அளவுக்கு ஒரு மலையாள படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது, அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் ரூ.15 கோடியை கடந்துள்ளது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து முத்திரை பாதித்துள்ளது.

READ MORE – அந்த படத்துக்கு நான் இசையமைக்கல.. ‘நீங்க தான் இசை’.! யுவன் vs ஆர்.கே.சுரேஷ்.!

இதற்கு அடுத்தபடியாக பிரேமலு திரைப்படம் ரூ.100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொது, இந்த படம் ரூ.85 கோடியை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த அமோக வரவேற்புக்கு படத்தின் இறுதி காட்சியில், “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது” என தொடங்கும் “கண்மணி” பாட்டு காதலுக்கு மட்டும் இல்லை நட்புக்கும் பொருந்துகிற மாதிரி புதிய கோணத்தில் ரசிக்கும்படி வைத்த இயக்குனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment