ஓமைக்ரான் பரவல் : தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர்!

ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த ஓமைக்ரான் தொற்று பரவியுள்ளதால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் … Read more

+2 தேர்வில் அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் திருவண்ணாமலை ஆட்சியர்!

பிளஸ் 2  தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த திருவண்ணாமலை ஆரணி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய மாவட்ட ஆட்சியர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அடுத்த பத்தியவரம் எனும் கிராமத்தில் உள்ள அமலாக்கராணி என்ற பார்வையற்றோர் பள்ளி இயங்கி வருகிறது, இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்றோர் தங்கி பயின்று வருகின்றனர். அண்மையில் வெளியாகிய பிளஸ் டூ தேர்வில் சீனிவாசன் என்ற மாணவன் 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதன்மையாக வந்துள்ளார். இதனை அறிந்த திருவண்ணாமலை மாவட்ட … Read more

+2 வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தும் மேற்படிப்புக்கு வழியில்லாத மாணவிக்கு வீடு தேடி சென்று உதவிய ஆட்சியர்!

பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தும் மேற்படிப்புக்கு வழியில்லாததால் வசதி இல்லாததால் ஆட்சியருக்கு கடிதம் எழுதிய மாணவியை நேரில் சென்று உதவி செய்த ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே உள்ள அக்ரா பாளையம் என்னும் கிராமத்தில் உள்ள பெரணமல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தவர் தான் பரிமளா. இவர் இறுதித் தேர்வில் 600க்கு 502 மதிப்பெண்கள் என பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் … Read more

ஊரடங்கு நீட்டிப்பு.? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது.!

மே 25-ல் மருத்துவ நிபுணர்களிடம் முதல்வர் ஆலோசித்த நிலையில், தற்போது ஆட்சியர்களிடம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நாளை மறுநாள் 4-வது பொதுமுடக்கம் முடியும் நிலையில் 5-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது பற்றி முதல்வர் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 25-ல் மருத்துவ நிபுணர்களிடம் முதல்வர் ஆலோசித்த நிலையில், தற்போது ஆட்சியர்களிடம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். … Read more

அரசு பள்ளியில் ஆசிரியரான நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி…!!

நெல்லை: நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி ஆய்வு பணிகளை மேற்கொண்டு +2 மாணவ மாணவிகளுக்கு தோட்டக்கலை குறித்து பாடம் எடுத்து அசத்தினார். இதனால் அங்குள்ள மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் தோட்டக்கலை குறித்து பயின்றனர்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு – ஜனவரி 14ஆம் தேதி ஆரம்பம்…!

மதுரையில் மாவட்ட கலெக்டருடன் நடந்த சந்தித்தலில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்புகள் மற்றும் விதிமுறைகளை கலந்துரையாடினர். அதன்படி அவனியாபுரத்தில் ஜனவரி 14ஆம் தேதியும்,பாலமேட்டில் 15ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 16ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கூறியுள்ளார். இது காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறும். இதற்காக 500 காவலர்களும், 10 ஆம்புலன்ஸ், 3 தீ அணைப்பு படைகள் மற்றும் 10 மருத்துவ குழுக்கள் அமைக்க படும் என்று கூறியுள்ளனர். இப்போட்டியில் மொத்தம் 500 எருதுகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.