கருணாநிதி சிலை திறப்பு விழா:கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை…!

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காங்கிரஸ் மூன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.அதேபோல் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க உள்ளனர்.இந்த விழாவிற்கு ரஜினி மற்றும் கமல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி சார்ந்த சில நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே நேரம் ஒதுக்கியதால் மதுரை செல்கிறார். மதுரையில் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை மீண்டும் சென்னை திரும்புகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

Leave a Comment