ஜப்பான் தீவில் நிலநடுக்கம்… 6.5 ரிக்டராக பதிவு.!

Japan Earthquake

Earthquake : ஜப்பானில் போனின் தீவுகளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் போனின் தீவு பகுதியில் இன்று (ஏப்ரல் 27) 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் 503.2 கிமீ (312 மைல்) தூரம் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. கடல் தீவு பகுதியில் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைக்கு இந்த நிலநடுக்கம் குறித்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. … Read more

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்த மம்தா பேனர்ஜி.!

Mamtha Banerjee

Mamata Banerjee : மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்படுகையில் ஹெலிகாப்டருக்குள் இடறி விழுந்தார். மக்களவை தேர்தல் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி இன்று தனது பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்படுகையில் தவறி விழுந்துள்ளார். துர்காபூரில் தனது கட்சி பிரச்சாரத்தை முடித்து கொண்டு, அடுத்தகட்ட பிரச்சாரத்திற்கு செல்ல அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹெலிகாப்டரில் மம்தா ஏறினார். அப்போது நிலை … Read more

உத்ரகாண்ட்டில் பரவிய காட்டுத்தீ..! களத்தில் இறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்.! 3 பேர் கைது.!

Uttarkhand Forest Fire

Forest Fire : உத்ரகாண்ட்டில் பரவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ராணுவ ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் காட்டுத்தீ அதிகளவில் பரவும் சூழல் நிலவும். எனவே அதனை கருத்தில் கொண்டு, காட்டு பகுதியில் தீப்பற்றக்கூடிய பொருட்களோ, அல்லது சிறிய அளவில் தீ மூட்டுவதோ கூட பெரிய அளவிலான காட்டுதீக்கு வழிவகுத்து விடும். உத்தரகாண்ட் மாநிலத்தில், நைனிடா பகுதியில் காட்டுத்தீ பரவி தற்போது அதனை தணிக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தீயை அணைக்கும் … Read more

எங்களுக்கும் அந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை.! பிரதமரின் விமர்சனமும்.. காங்கிரஸின் விளக்கமும்…

PM Modi - Congress Leaders Mallikarjun kharge Rahul gandhi

Congress : தேர்தல் ஒப்புகை சீட்டு வழக்குக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் தலைமை விளக்கம் அளித்துள்ளது. நேற்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஒப்புகை சீட்டு 100 சதவீத சரிபார்ப்பு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மீண்டும் வாக்குசீட்டு முறைப்படி தேர்தலை நடத்த முடியாது என்றும் , வாக்கு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு விவிபேட்டில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் சரி பார்க்க முடியாது என்றும் கூறி இதற்கான பொதுநல வழக்குகள் அனைத்தும் … Read more

16 லட்சம் கோடி ரூபாயும் முழுதாக திரும்ப வராது.! ராகுல் காந்தி விளக்கம்.!

Congress Leader Rahul Gandhi

Rahul Gandhi : தள்ளுபடி செய்யப்பட்ட 16 லட்சம் கோடி ரூபாய் முழுதாக திரும்பி வசூல் செய்ய முடியாது என் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தற்போது நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அடுத்தகட்ட தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல தேர்தல் பிரச்சார களம் நாளுக்கு நாள் பரபரப்பாக இயங்கி … Read more

மிக்ஜாம் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.276 கோடி.! மத்திய அரசு அறிவிப்பு.!

Central Govt release cyclone Relief fund

Flood Relief Amount : மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தற்போது 276 கோடி ரூபாயை நிவாரணமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் இரு புயல்கள் தாக்கின. அதில் முதலாக மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டன. அதே போல, டிசம்பர் இரண்டாம் பாதியில் தென்தமிழகத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய … Read more

தேர்தல் நாளிலும் ஓயாத வன்முறை.! மணிப்பூரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.! 

Manipur

Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதற்றம் குறைவாக உள்ள மாநிலங்களில் தேர்தலை ஒரே கட்டமாகவும், பாதுகாப்பு கூடுதலாக தேவைப்படும் மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாகவும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் முதல் பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் … Read more

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake வீடியோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake Videos

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் மூலம் நல்லது எவ்வளவோ அதே போல தீமைகளும் நடக்க வாய்ப்புள்ளது என தொழில்நுட்ப வல்லுனர்களே எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். AI தொழில்நுட்பத்தின் மூலம் ஒருவர் முகத்தை வேறு ஒருவர் போல மாற்றியமைக்கப்படும் டீப்ஃபேக் … Read more

மீண்டும் அதே பிரச்சாரம்… கார்கே கோரிக்கையை ஏற்க மறுக்கும் பிரதமர் மோடி.?

PM Modi - Mallikarjun Kharge

Election2024 : பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மீண்டும் காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி பற்றி விமர்சனம் செய்துள்ளார். . 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. தேர்தல் சமயம் என்பதால் தேசிய கட்சிகளான பாஜக , காங்கிரஸ் கட்சியினர் தங்கள் தேர்தல் பரப்புரைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் வாக்குறுதி : குறிப்பாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், சம பகிர்வு என்ற தலைப்பின் … Read more

தெலுங்கானாவில் 11,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.! 7 மாணவர்கள் தற்கொலை.!

Telangana Students Suicide

Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வானது கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்றது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 9.8 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். நேற்று முன்தினம் வெளியான தேர்வு முடிவுகளின்படி, 11ஆம் வகுப்பு … Read more