ஏர் இந்தியாவின் டிவிட்டர் கணக்கை தீவிரவாத கும்பல் ஹேக் செய்துள்ளது.!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் டிவிட்டர் கணக்கை துருக்கியை

By Dinasuvadu desk | Published: Mar 15, 2018 12:05 PM

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் டிவிட்டர் கணக்கை துருக்கியை  சேர்ந்த சைபர் தீவிரவாத கும்பல் ஹேக் செய்துள்ளது.அவர்களே இதை ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள். அந்த சைபர் ஹக் கும்பல் ஏர் இந்தியா கணக்கில் இருந்து விமானம் ரத்தாகிவிட்டது, ஏர் இந்தியா இனி ஓடாது, இனி நாங்கள் துருக்கியுடன் இணைந்து செயல்பட போகிறோம் என்று வரிசையாக நிறைய டிவிட்டுகள் போட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஏர் இந்தியா என்ற பெயரையும் டிவிட்டரில் மாற்றி உள்ளார்கள். இதனால் உடனே அந்த கணக்கில் ப்ளூ டிக் பறிபோனது. அதேபோல் ஏர் இந்தியா பயோ விவரத்திலும் விவரங்களை மாற்றி உள்ளார்கள். இந்த நிலையில் அந்த ”நாங்கள் ஏர் இந்தியா கணக்கை ஹேக் செய்துவிட்டோம்” என்று போஸ்ட் போட்டு உள்ளார்கள்.மேலும் ஏர் இந்தியாவின் ட்விட்டரில் ஒரு துருக்கி தீவிரவாதி அந்நாட்டு கொடியுடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த டிவிட்டுகள் டெலிட் செய்யப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc