கூடுதல் கட்டணம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வாங்கினால் புகார் தெரிவிக்கலாம் !தமிழ்நாடு மருத்துவர் தேர்வுக்குழு

தமிழ்நாடு மருத்துவர் தேர்வுக்குழு,தனியார் மருத்துவக் கல்லூரிகளில், கூடுதல் கட்டணம் வாங்கினால், புகார் தெரிவிக்கலாம் என்று  அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 445 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 783 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 127 இடங்களும் என மொத்தம் 3 ஆயிரத்து 355 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28ஆம் தேதி வெளியிடப்பட்டு, ஜூலை 1ஆம் தேதி, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டண விவரத்தையும் வெளியிட்டுள்ள அதிகாரிகள், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, கூடுதல் கட்டணமோ, நன்கொடையோ கேட்டால், மருத்துவத் தேர்வுக் குழு செயலாளரிடம் புகார் அளிக்கலாம் என்றும், கூடுதல் விவரங்களை www.tn health.org, www.tn medical selection.org ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment