ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் கைது….!

ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் .

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இதற்கிடையில், ஐபிஎல் போட்டிக்கு எதிராக அண்ணா சாலை அருகே மாலை 5 மணிக்கு போராட்டம் நடத்துவோம் என்று பாரதிராஜா உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து,ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலை முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் மறியல் போராட்டம் என அணி அணியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். அண்ணா சாலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் பாரதிராஜா, வெற்றி மாறன், கவுதமன், வைரமுத்து உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில்  ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment