எது முதலில் 100 ரூபாயைத் தொடும்?பெட்ரோல் விலையா ?டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பா?கடுமையான போட்டி

பெட்ரோல் விலை மற்றும்  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இடையே கடும் போட்டி நடைபெறுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

Image result for petrol indian currency

இந்நிலையில்  பெட்ரோல் , டீசல் விலையானது இன்றும் உயர்ந்துள்ளது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்துள்ளது.இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 82.41 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், டீசலின் விலையும் 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 75.39 ஆக விற்பனை ஆகிறது.

அதேபோல்  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2:30 மணிக்கு மீண்டும் சரிவு ஏற்பட்டு 1 டாலருக்கு நிகரான மதிப்பு 71.38 ரூபாய் ஆகியுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும். கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிவாகியுள்ளது.

Related image

இந்நிலையில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்தும்  மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்  மதிப்பு தொடர்ந்து சரிந்தும் வருகிறது.இந்நிலையில் இந்த இரண்டும் கடும் போட்டியில் சென்று கொண்டிருக்கிறது.குறிப்பாக சதத்தை அடிப்பது பெட்ரோலா?இல்லை இந்திய ரூபாயின் மதிப்பா?என்ற கேள்வி சாமானிய மக்களிடையே ஏற்படுள்ளது.இந்த இரண்டில் ஏதாவது ஓன்று  சதத்தை தொட்டாலும் அது சாதாரண மக்களைத்தான் அதிகமாக பாதிக்கும்.இதனால் பொதுமக்கள் அனைவரும் விழி பிதுங்கியே இருந்து வருகின்றனர்.

Leave a Comment