மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் படிப்பு பாதிப்பு ..!அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி பதில்….!

மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Related image
இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,  தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு 26,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும். மத்திய அரசுடன் இணைந்து 671 பள்ளிகளில் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும்.மாணவிகள் கொலுசு அணிந்து வருவதால் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும். மாணவிகள் பூ வைப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. கொலுசு அணிந்து வருவதற்கு பள்ளிக்கல்விதுறை தடை விதித்துள்ளது குறித்து என் கவனத்திற்கு வரவில்லை  என்றும்  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment