வேலூர் மக்களவை தொகுதியில் மும்முனைப் போட்டி!பின்வாங்கிய தினகரன்,கமல்ஹாசன்

பணப்பட்டுவாடா புகார்  காரணமாக  வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலை மூன்று மணியுடன் முடிவடைந்தது.

ஆனால்  வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என மக்கள் நீதி மையம் அறிவித்துள்ளது.மேலும் தினகரனும் தேர்தலில் போட்டியில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இதனால் வேலூர் மக்களவைத் தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுகவும் போட்டியிடாத நிலையில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.  வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக – திமுக – நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டியாக அமைந்துள்ளது. நாளை வேட்பு மனுக்கள் மீதான  பரிசீலனை நடைபெறுகிறது.