டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகள் விவரம் இதோ

8 அணிகள் கொண்ட 4-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி .என் .பி .எல் ) 20-ஓவர் கிரிக்கெட் போட்டி  நாளை  தொடங்குகிறது.

இந்தாண்டு மொத்தம் 32 போட்டிகள் நடைபெறுகிறது .அதில் தலா 15 போட்டிகள் நெல்லை ,நந்தம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் அணிகள் விவரம் : டூட்டி பேட்ரியாட்ஸ்,சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,செம் மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ்,ரூபி திருச்சி வாரியர்ஸ், லைகா கோவை கிங்ஸ், வி.பி. காஞ்சி வீரன்ஸ், ஐடிரீம் காரைக்குடி காளை ஆகிய  8 அணிகள் இடம்பெற்றுள்ளது.

நாளை நடைபெறும் முதல் போட்டியில் சோப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றது.நாளை இரவு 7.15 மணிக்கு  தொடங்குகிறது.இந்த போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஒளிபரப்ப உள்ளது.