டோஷிபா(Toshiba’s)-வின் புதிய அறிமுகம் : டைனாஎட்ஜ் ஹெட்செட் ( DinaEdge Headset)..!

பணியாளர்களின் பணி அனுபவத்தை மேலும் நவீனபடுத்த , கூகுள் க்ளாஸ் போன்ற தலையில் அணியும் திரையான ஆக்குமென்டேட் ரியாலிட்டி-AR ( உண்மையானவற்றை போன்று மிண்ணுனு முறையில் உருவாக்குவது) ஹெட்செட்டை டோஷிபா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மினி விண்டோஸ் 10 ப்ரொபெஷனல் PC – டைனாஎட்ஜ் இயங்குதளத்தின் கீழ் இயங்கும் இந்த AR ஹெட்செட், வல்லுநர்களின் கண்களுக்கு முன் தொழில் சம்பந்தப்பட்ட தகவல்களை திரையிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதுபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டைனாஎட்ஜ் விண்டோஸ் 10 கணினியை முழுவதுமாக ஒற்றி உருவாக்கப்பட்ட இந்த ஹெட்செட், B2B டெக்னாலஜி சொல்யூசன்ஸ் போன்ற நிறுவனங்களின் பணியிடங்களை நவீனபடுத்தும் வகையில், கண கச்சிதமான, முழு செயல்திறன் கொண்ட கணினியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டோஷிபாவின் இந்த AR ஹெட்செட், 640×360 ரெசல்யூசன் உள்ள 0.26 இன்ச் திரையை கொண்டுள்ளது. அதனுடன் ஜீன்ஸ் பாக்கெட்டில் வைக்கும் அளவுடைய சிறிய கணினி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெட்செட்டை, நமது வலது அல்லது இடது புற கண்ணாடியுடன் பொருத்தி, தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய தகவல்களை அனுப்பும் சிறு கணினியை அதில் இணைக்கலாம். இந்த சிறு கணினியானது, 6.5×3.3×0.8 இன்ச் அளவுடன், 10.9 அவுன்சு எடையுடையது. மிகச்சிறிய அளவுடையதாக இருந்தாலும், ஒரு முழுமையான கணினியின் செயல்திறனை கொண்டுள்ளது. விண்டோஸ் 10 ஃப்ரோ இயங்குதளத்தில் செயல்படும் இது, இன்டல் கோர் 6 இயக்கியை (Intel Core Processor – 6 Generation) கொண்டுள்ளது. டோஷிபா டைனாஎட்ஜ், மிகச்சிறியதாகவும், குறைந்த எடையில் யாருக்கும் எளிதில் புலப்படாத வண்ணம் இருக்கும்.

இந்த டைனாஎட்ஜ் மினி கணினி, பழைய வெளிப்புற கருவிகளையும், தகவல்களை பரிமாறும் புதிய செயலிகளையும் ஒருங்கிணைக்கும் இணைப்பு மையமாக செயல்படுவதாக, டோஷிபாவின் இணையதளம் கூறுகிறது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment