இந்திய அணியில் விளையாடினாலும் எனக்கு தமிழில் பேசவே பிடிக்கும்!

தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் விளையாடினாலும் எனக்கு தமிழில் பேசவே பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நிதாஹஸ் கோப்பை இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக், கடைசி 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்ததன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுகுறித்து பேசிய அவர், கடைசி நேரத்தில் களமிறங்கிய போது சிக்சர்கள் அடிக்கும் எண்ணம் மனதில் தோன்றவில்லை என்றும், கடைசி பந்தை அடித்த போது அது சிக்சராக மாறுமா? என்பதில் சிறிது சந்தேகம் இருந்ததாகவும் தெரிவித்தார். ஏழாவது நபராக கேப்டன் ரோகித் தம்மை களமிறக்கிய போது சிறிது அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்ததாக தெரிவித்த அவர், ஆனால் இதைக் கோபம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.

இந்திய அணியில் விளையாடினாலும் எனக்கு தமிழில் பேசவே பிடிக்கும் தெரிவித்துள்ளார் .வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முடியும் என நம்பினேன்.வங்கதேசத்துக்கு எதிரான போட்டி தனிப்பட்ட முறையில் எனது மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment