அமெரிக்காவில் படிக்க ஆர்வம் காட்டி வரும் இந்திய மாணவர்கள்! உலக அளவில் இரண்டாமிடம்!

வெளிநாடுகளில் கல்வி பயில இந்திய மாணவர்களிடையே அதிக ஆர்வம் உள்ளது. அதிலும் குறிப்பாக வெளிநாடு சென்று படிக்க அமெரிக்கா பெரும்பாலானோர் தேர்வாக இருக்கிறது. அமெரிக்காவில் பயிலும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை பற்றி அமெரிக்க ‘ சர்வதேச கல்வி பரிமாற்றம்.’ எனும் அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது. அதில், அமெரிக்க வந்து படிக்கும் சர்வதேச மாணவர்களில் அதிகமான இடங்களை பெற்றவர்கள் சீனா நாட்டு மாணாவர்கள்தான். அதிலும் தொடர்ந்து 10 ஆண்டுகளாக சீனா முதலிடத்தில் உள்ளது. இதில், இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. … Read more

தக்காளி பண்ணையை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலர்கள்! அண்டை நாட்டில் நிலவரம் என்ன?

நம்மூரில் தற்போது வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய் தாண்டி விற்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும், நம் நாட்டின் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெங்காயத்தை பதுக்கி வைத்து கூடாது எனவும் பல்வேறு விதிமுறைகளை விதித்து விலைவாசியை கட்டுப்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. தற்போது இதே நிலைமை அண்டை நாடான பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ளது. அங்கு தக்காளி விலை மிகவும் அதிகமாக விலை ஏறியுள்ளது. அங்கு விளைச்சல் … Read more

பருவமழை இல்லை! உணவு இல்லை! பசியால் 150 யானைகள் பரிதாப சாவு!

ஜிம்பாவே நாட்டில் வழக்கத்துக்கு மாறாக பருவமழை பொய்த்துப்போனதால் அங்குள்ள மக்கள் உணவுக்கு தவித்து வருகின்றனர். அதே போல, காட்டில் உள்ள மிருகங்களும் மிகுந்த வறட்சியால் உணவின்றி தவித்து வருகின்றன. இதனால் அந்நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் 150 யானைகள் உணவின்றி இருந்துள்ளன. இதற்கு முன்னர் 55 யானைகள் உணவின்றி இருந்துள்ளன. இதனால் அருகாட்சியகத்தில் உள்ள மற்ற யானைகளை வேறு இடத்திற்கு மாற்ற ஜிம்பாவே அரசு திட்டமிட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்துறை அமைச்சகத்திற்கு அருகே வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலி..!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு அருகே காரில் குண்டு வெடித்ததில் நேற்று 7 பேர் சம்பவ இடத்திலே இறந்தனர். மேலும்  7 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இரண்டு பேராசிரியர்களுக்கு பதிலாக இரண்டு தலிபான் தளபதிகள் மற்றும் ஹக்கானி போராளிக்குழுவின் தலைவர் விடுவிக்கப்பட்ட ஒரு நாள் சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலைக்கு பீர் ஊற்றிக்கொடுத்த அமெரிக்காவை சேர்ந்த இரு புல்லைங்கோ

அமெரிக்காவில்  குட்டி முதலைக்கு பீர் குடிக்க வைத்த இளைஞர்கள் . அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள திமோதி மற்றும் நோவா ஆஸ்போர்ன்  இளைஞர்கள் இருவர் தங்களது பொழுதுபோக்கை கழிக்க சென்ற இடத்தில சும்மா இருக்காமல் தங்களது சேட்டையை குட்டி முதலையிடம் காட்ட அது  கையை கடித்துள்ளது . இதனால் கோபமடைந்த திமோதி என்ற 27 வயதுமிக்க இளைஞர் தான் குடித்து மீதம் வைத்திருந்த பீரை அந்த முதலையின் வாயில் ஊற்றியுள்ளார் இதனை அவருடன் இருந்த 22 … Read more

முகமூடிக்கு தடை விதித்த ஹாங்காங் அரசு! அதற்கும் சேர்த்து முகமூடியோடு போராடும் மக்கள்!

ஹாங்காங் நாட்டு விவகாரத்தில் சீன நாட்டின் தலையீடு அதிகமாகவே உள்ளது. இதனை கண்டித்து பல மாதங்களாக ஹாங்காங் மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஆண், பெண் என அனைவரும் ஒரு சேர போராடி வருகின்றனர். இவர்கள் ஹாங்காங் நாட்டு தலைவரையும் பதவி விளக்க சொல்லி போராடுவதால், அரசு போராட்டகாரர்களை கண்காணிக்கும் படி கூறியிருந்தது. ஆனால் போராட்டக்காரர்கள் முகமூடி அணிந்து கொண்டு போராடுவதால் அவர்களால் போராட்டக்காரர்களை கண்டறிய முடியவில்லை. இதனால் அந்நாட்டு அரசு முகமூடி அணிய தடை … Read more

நேற்று 20 பேர் இன்று 9 பேர்! அமெரிக்காவில் மார்பநபர்கள் திடீர் துப்பாக்கி சூடு!

அமெரிக்காவில் நேற்று டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் திடீரென புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தபொதுமக்கள் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதில், 20 பேர் கொல்லப்பட்டனர். 40 க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போதும் ஓஹியோவில் ஒரு பகுதியில் மர்மநபர்கள் திடீர் துய்ப்பாகி சூடு. அதில், 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 15க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.

பாங்காக்கில் 3 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு! முக்கிய மாநாடு நடைபெற்று வருவதால் பரபரப்பு!

பாங்காக்கில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. அம்மாநாட்டில்,  இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா சார்பில் பாம்பியோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த வேளையில் பாங்காக்கில் மூன்று நாட்டு  வெடுகுண்டுகள் வெடித்துள்ளன. பாங்காங், சோங் ரயில் நிலையம் அருகில், மஹானா கோன் பகுதி கட்டிடம், மாடி ரயில்நிலையம் என மூன்று இடங்களில் நாட்டு வெடிகுண்டு வெடிக்கப்பட்டுள்ளன. இதில் அதிர்ஷ்டாவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை, இருப்பினும் இரண்டு துப்புரவு பணியாளர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் உள்ளனர்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் திடீரென வெடித்து சிதறியது! தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை!

தற்போது பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு அதிகரித்தாலும் உலகம் முழுவதும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பெருகி வருவதாலும்  முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனம் கோனா எனும் எலெக்ட்ரிக் காரை சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை கனடா நாட்டின் மான்ட்ரியல் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த மார்ச்  … Read more

7 மாத குழந்தையை காப்பாற்ற உயிர்தியாகம் செய்த 5 வயது சிறுமி! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் புகைப்படம்!

சிரியா இந்த பெயரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது குண்டுகளின் சத்தமும் அலறல் குரல்களும் சிரியாவில் உள்நாட்டு போர் அதிகரித்ததன் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.  அந்நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்காரவாதிகள் இருப்பதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது. 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில்  கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில்  சிரியாவில்  ஒரு … Read more