வீணானது கோலி தந்திரம்…5 பந்தில் 2 DRS இழந்த இந்தியா..!

இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்த போட்டியில் இந்தியா அணி தடுமாறி வருகிறது. கேப்டன் ஜோ ரூட்டின் சதத்தால் இங்கிலாந்து வலுவான ஸ்கோரை நோக்கி நகர்கிறது. இரண்டாவது நாளிலும் இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை தொடங்கியது. ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இடையேயான கூட்டணியை முறிக்க கோலி பயன்படுத்திய தந்திரம் வீணானது. கேப்டன் கோலி  இரண்டு டி.ஆர்.எஸ் எடுத்தார். ஆனால், டி.ஆர்.எஸ் … Read more

முதல் முறையாக தனது தேவதையின் புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதி.!

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதியினர் தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்து வாமிகா என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா காதலித்து திருமணம் செய்து கொண்டனர் . சமீபத்தில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 11-ம் தேதி இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக விராட் கோலி மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் … Read more

விராட் கோலியாக மாறிய வார்னர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக, அவரின் விடியோக்களை பகிர்ந்து, அதில் கோலி முகத்திற்கு பதிலாக வார்னே, தனது முகத்தை இணைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் பல சாதனைகள் நிகழ்த்திய வீரரை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகிறதாகவும், இதற்கான சிறந்த வீரர்களின் பட்டியலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் சிறந்த வீரர் என்ற … Read more

ஐசிசி விருதுகள் : தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக ‘ரன் மெஷின்’ கோலி தேர்வு !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கேப்டன் விராட் கோலியை தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் வீரராக தேர்வு செய்துள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி அறிமுகமானதிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களில் ஒருவர். ஆனால், ஒருநாள் போட்டியில் அவரது ஆதிக்கத்திற்கு இணையாக  இதுவரை எந்த கிரிக்கெட் வீரர் ஈடுகொடுக்க முடியவில்லை, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதில் கோலி முதன்மையானவர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் … Read more

#ICCAwards: 10 ஆண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணி இதுதான்.. கேப்டனான கிங் கோலி!

10 ஆண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணியை ஐசிசி உருவாகியுள்ளது. இதில் டெஸ்ட் அணியில் கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசி விருதுகள்: ஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), சிறந்த வீரர்களுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 10 ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி விருதுகள் வழங்குகிறது. இதில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் பல சாதனைகள் நிகழ்த்தியவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறதாகவும், இதற்கான சிறந்த வீரர்களின் … Read more

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஸ்மித்தை முந்துவாரா கோலி?

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்தைமுந்தி முதலிடம் பிடிப்பாரா என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.  ஆஸ்திரேலியாக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து பலரும் இந்திய அணியை விமர்சித்தது. இதனால் அடுத்த நடைபெறவுள்ள போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித்தை முந்தி, இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடம் பிடிக்கவுள்ளார். அடிலெய்ட் டெஸ்ட் முதல் … Read more

2008 முதல் ஐபிஎல் தொடர் மூலம் தோனி சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா??

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் தல தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் 137 கோடி ருபாய் சம்பாதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பொதுவாக ஐபிஎல் தொடர் என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அதன் கேப்டன் தல தோனியும் தான். எந்த ஒரு கடினமான நிலைமையிலும் தந்து கோபத்தை சக வீரர்களிடம் வெளிகாட்டமாட்டார். டெஸ்ட், டி-20, ஒருநாள், உலகக்கோப்பை, ஐபிஎல், என அனைத்து வகையான கோப்பைகளையும் கைப்பற்றிய … Read more

தரவரிசை பட்டியலில் கிங் கோலி முதலிடம்..! ஹிட்மேன் 2-வது இடம்..!

ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான சமீபத்திய தரவரிசைகளை ஐ.சி.சி நேற்று  வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றவில்லை என்றாலும், இந்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். நேற்று வெளியிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் கோலி முதலிடத்தில் உள்ளார். கோலி 870 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹார்திக் பாண்டியா 22 இடங்கள் தாண்டி 71 இடத்திலிருந்து 49 வது இடத்தை எட்டியுள்ளார். அவர் முதல் முறையாக  முதல் … Read more

ஐசிசி தரவரிசை பட்டியல்: 3 ஆம் இடத்தில் கே.எல் ராகுல்.. முதல் இடத்தில் யார் தெரியுமா?

ஐசிசி டி-20 தரவரிசை பட்டியல் வெளியான நிலையில், 3 ஆம் இடத்தில் கே.எல் ராகுல் உள்ளார். அதனையடுத்து 9 ஆம் இடத்தில் விராட் கோலி உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியதை தொடர்ந்து, டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி அதிரடியாக கைப்பற்றியது. இதில் சிட்னியில் நடைபெற்ற மூன்றாம் ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலியா அணி, … Read more

யாஹூவில் அதிகம் தேடப்பட்டவர்களில் தோனி மற்றும் விராட் கோலி

கிரிக்கெட் போட்டியின் போக்கை நொடிக்கு நொடி மாற்றி அமைப்பதில் தோனி மற்றும் விராட் கோலி வல்லவர்கள்.இவர்கள் கிரிக்கெட்டில் மட்டுமல்ல சமூக வலைதளங்கள் மற்றும் இணையத்திலும் ராஜாக்கள் என்று நிருபித்து காட்டியுள்ளனர். யாகூ(Yahoo) சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் 2020 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் ஒருவர். இவர்கள் தேடல்களின் முதல் 20 பேர் கொண்ட பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது . இந்த ஆண்டு கொரோனா … Read more