தரவரிசை பட்டியலில் கிங் கோலி முதலிடம்..! ஹிட்மேன் 2-வது இடம்..!

ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான சமீபத்திய தரவரிசைகளை ஐ.சி.சி நேற்று  வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றவில்லை என்றாலும், இந்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். நேற்று வெளியிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் கோலி முதலிடத்தில் உள்ளார்.

கோலி 870 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹார்திக் பாண்டியா 22 இடங்கள் தாண்டி 71 இடத்திலிருந்து 49 வது இடத்தை எட்டியுள்ளார். அவர் முதல் முறையாக  முதல் 50 பேட்ஸ்மேன் தரவரிசையை இடம்பிடிப்பது இதுவே முதல் முறை. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது கோலி இரண்டு அரைசதம் அடித்தார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் 89 ரன்களும், கடைசி போட்டியில் 63 ரன்களும் எடுத்தார். ஐ.சி.சி வெளியிடப்பட்ட ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதல் நான்கு இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. கோலி 870 புள்ளிகளுடன் தனது முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 842 புள்ளிகளைப் பெற்ற இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா உள்ளார்.

பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் 837 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். நான்காவது இடத்தில் 818 புள்ளிகளுடன் நியூசிலாந்தின் ரோஸ் டெய்லர் உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் இரண்டு இடங்கள் தாண்டி 791 புள்ளிகள் பெற்று தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பிஞ்ச் ஒரு சதம் அடித்தார்.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் இரண்டு அரைசதம் அடித்தார். இதன் காரணமாக, 2017 க்குப் பிறகு முதல் முறையாக முதல் 20 இடங்களில் இடம்பெற்றுள்ளார்.

 

author avatar
murugan