கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கவிஞர் வைரமுத்து

கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்.  முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் … Read more

கமலஹாசன் விரைவில் வீடு திரும்புவார்…! – வைரமுத்து ட்வீட்

கட்டுறுதி மிக்கஉடல் கல்லுறுதி மிக்கமனம் மருத்துவ மகத்துவம் வேறென்ன வேண்டும்? விரைவில் வீடு திரும்புவார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக இராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடபட்டது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து … Read more

படையப்பா எழுந்து வா; பாட்ஷாபோல் நடந்து வா – வைரமுத்து ட்வீட்!

உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்து வைரமுத்து ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த வியாழக்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு வார்டில் வைத்து மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் பலர் பிரார்த்தனை செய்து … Read more

தமிழுக்கு ஏடு திறந்தநாள்..!தமிழர்க்குச் சூடு பிறந்தநாள்….! வைரமுத்துவின் ஆசான் பிறந்தநாள்..! – கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து, கலைஞர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் என பிரபலங்கள் மரியாதை செலுத்தினர். மேலும் பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், … Read more

கவிப்பேரரசால் விருதுகளுக்கு தான் பெருமை – சீமான்

தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்திருக்கிற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டால், அவ்விருதுகளுக்குதான் பெருமையே ஒழிய, நிறைகுடமாய்த் ததும்பும் அவருக்கல்ல.  கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிரபல மலையாள கவிஞரும், பாடலாசிரியருமானவர் ஓ.என்.வி. குறுப். ஞானபீட விருது பெற்ற அவரின் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஓ.என்.வி. இந்த ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்கப்படுகிறது. இதனையடுத்து, இந்த ஆண்டிற்கான ஓ.என்.வி விருதை கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்குவதாக கடந்த 26 ஆம் தேதியன்று ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிவித்தது. பிரபல நடிகை … Read more

#Breaking : ஓ.என்.வி விருதை திரும்ப தருகிறேன்…! கவிஞர் வைரமுத்து அறிவிப்பு…!

கேரளாவின் உயரிய விருதான ஓ.என்.வி இலக்கிய விருதை திருப்பி தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிரபல மலையாள கவிஞரும், பாடலாசிரியருமானவர் ஓ.என்.வி. குறுப். ஞானபீட விருது பெற்ற அவரின் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஓ.என்.வி. இந்த ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்கப்படுகிறது. இதனையடுத்து, இந்த ஆண்டிற்கான ஓ.என்.வி விருதை கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்குவதாக கடந்த 26 ஆம் தேதியன்று ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிவித்தது. பிரபல நடிகை பார்வதி, பாடகி சின்மயி, … Read more

கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!!

ஓ.என்.வி. விருது பெற்றிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு பிரபல மலையாள கவிஞரும், பாடலாசிரியருமானவர் ஓ.என்.வி. குறுப். ஞானபீட விருது பெற்ற அவரின் பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஓ.என்.வி. இந்த ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து கலைஞரின் கோபாலபுர இல்லத்திற்கு சென்று முதல்வரிடம் பாராட்டுகளை பெற்றுள்ளார். இத்தனை தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது … Read more

நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கிய வைரமுத்து..!!

கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கியுள்ளார். கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5லட்சம் வழங்கியுள்ளார். இதனை அவர் … Read more

கொரோனாவால் கொள்ளையடிக்கப்பட்ட மாணவர்களின் காலத்தை மீட்டு தர வேண்டும் – வைரமுத்து

கொரோனாவால் கொள்ளையடிக்கப்பட்ட காலத்தை மனித குலத்தை மீட்டு தருவது தான் இந்த உலகத்தின் மிகப்பெரிய சவால். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து  தொடர்ந்து தற்போது பல புதிய கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயப்படாவில்லை. … Read more

மரணமே உனக்கு சிரிக்க தெரியாது…! அதனால் தான் சிரிப்பை திருடிவிட்டாய்…! கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து…!

பிரபலங்களும், மனிதர்களும் மட்டும் அழவில்லை. அவர் நட்ட மரங்களும் தான் அழுகின்றன. மரணமே உனக்கு சிரிக்க தெரியாது. அதனால் தான் சிரிப்பை திருடிவிட்டாய். நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்துவும் இரங்கல் … Read more