இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி தரமுடியாது – அமெரிக்கா!

இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அனுமதி மறுப்பு. கூடுதல் தரவுகளுடன் உயிரி உரிமை விண்ணப்ப வழியில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தல். இந்தியாவிலுள்ள ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட கூடிய கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும், இந்த தடுப்பூசி மூன்றாவது கட்ட பரிசோதனை இன்னும் வெளி வராமல் உள்ளது. சாதாரணமாகவே ஒரு தடுப்பூசிக்கு உலக … Read more

அமெரிக்காவில் ஒன்றுடன் ஒன்று மோதிய 8 வாகனங்கள் – 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றாக மோதியுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபீனிக்ஸ் நகரின் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்ட நேரத்தி,ல் பால் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்ற பயணிகள் வாகனத்துடன் மோதி உள்ளது. இந்த விபத்தில் எட்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து மோதியதில் பால் லாரி தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து உள்ளது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். … Read more

அமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து – 10 பேர் மாயம்; 2 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கீ வெஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அந்த படகில் இருந்த 2 பேர் பலியானதுடன், 10 பேர் மாயமாகி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள தென் கிழக்கு பகுதியான புளோரிடா மாகாணத்தில் கீ வெஸ்ட் பகுதியில் சென்று கொண்டிருந்த படகு ஒன்று நேற்று மதியம் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கிய நிலையில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் … Read more

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா பயணம்..!

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகின்ற 24ஆம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகின்ற 24-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். மே 24 முதல் 28 ஆம் தேதி வரை அமெரிக்காவில் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணமானது, கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுடன் அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும், இந்தியாவில் தடை இன்றி தடுப்பூசி கிடைப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் … Read more

அமெரிக்காவில் ஐ.டி வேலையை உதறிவிட்டு,மாடு வளர்ப்பு மூலம் ரூ.44 கோடி வருவாய் ஈட்டும் தன்னம்பிக்கை இளைஞர்..!

கர்நாடகாவைச் சேர்ந்த கிஷோர் என்ற இளைஞர் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த ஐ.டி வேலையை விட்டுவிட்டு,மாடு வளர்ப்பு மூலம் ரூ.44 கோடி வருவாய் ஈட்டி வருகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த கிஷோர் இந்துகுரி என்ற இளைஞர்,கரக்பூர் ஐஐடியில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு,பி.ஹெச்.டி படிப்பதற்காக அமெரிக்கா சென்றார்.அதன் பிறகு,படிப்பை நிறைவு செய்த கிஷோர்,உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுள் ஒன்றான Intel லில் பணிக்கு சேர்ந்து மாதம் அதிக ஊதியம் வாங்கி வந்தார்.எனினும்,கிஷோரால் அந்த வேலையை தொடர்ந்து செய்ய முடியவில்லை. இதனையடுத்து,6 ஆண்டுகள் கழித்து … Read more

5 ஆயிரம் கோடிக்கு இஸ்ரவேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!

இஸ்ரேல் நாட்டிற்கு 5 ஆயிரத்து 381 கோடிக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையேயான பல ஆண்டு மோதல் தற்போது மீண்டும் தொடர்ந்து ஒரு வர காலமாக வெடித்து வரும் நிலையில், காசா முனை மற்றும் மேற்குக் கரையிலும் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்களது தாக்குதலுக்கு இஸ்ரேல் படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். … Read more

2021 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பட்டியல்…!

2021 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 93வது ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணாமாக இந்த ஆண்டு மிக குறைந்த எண்ணிகையிலான விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.இந்த விழாவிற்கு வருகைப் புரிந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள்,இயக்குநர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளுக்கு விருது … Read more

அமெரிக்காவில் நீர்நாய்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில், அட்லாண்டா நகரில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரின காட்சி கூடத்தில், நீர்நாய்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த ஓராண்டிற்கு மேலாக கொரோனா வைரஸ் ஆனது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த  நிலையில் இந்த வைரசை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. … Read more

இந்திய பயணத்தை தவிர்த்திடுங்கள் – அமெரிக்க நோய்க்கட்டுப்பாடு மையம் அறிவுறுத்தல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால் இந்தியாவிற்கு பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நாளுக்கு நாள் பல ஆயிரக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இந்தியா முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதால் பல நாடுகள் இந்தியாவிற்கான பயணம் மற்றும் இந்திய விமானங்கள் தங்கள் நாடுகளுக்குள் வருவதை தவிர்த்துள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இந்திய … Read more

யாருக்கும் எந்தவித அதிகாரமும் இல்லை – இசையமைப்பாளர் யுவன் திடீர் அறிக்கை!

தனது நிறுவனங்கள் சம்பந்தமாக தான் யாருக்கும் எந்த அதிகாரத்தையும் அளிக்கவில்லை எனவும், தன்னைத்தவிர வேறு யாரும் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு தான் பொறுப்பாக முடியாது எனவும் இசையமைப்பாளர் யுவன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா தனது சொந்த முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார். இதன் மூலம் பியார் பிரேமா காதல், மாமனிதன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். மாமனிதன் படம் வெளியாகாத நிலையில் தனது நிறுவனங்கள் குறித்து யுவன் சங்கர் ராஜா அறிக்கை ஒன்றை … Read more