5 ஆயிரம் கோடிக்கு இஸ்ரவேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!

இஸ்ரேல் நாட்டிற்கு 5 ஆயிரத்து 381 கோடிக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையேயான பல ஆண்டு மோதல் தற்போது மீண்டும் தொடர்ந்து ஒரு வர காலமாக வெடித்து வரும் நிலையில், காசா முனை மற்றும் மேற்குக் கரையிலும் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்களது தாக்குதலுக்கு இஸ்ரேல் படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இரு அமைப்பினருக்கும் இடையே தற்போது பயங்கர மோதல் வெடித்து வரும் நிலையில், உயிரிழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட காசாவில் உள்ளவர்கள் உயிரிழந்த நிலையில், இஸ்ரேலிலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இருதரப்பினருக்கும் இடையேயான சண்டையை நிறுத்துமாறு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்த நிலையில், இன்னும் போர் அதிகரிக்கும் சூழ்நிலை தான் உருவாகி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் 735 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 5 ஆயிரத்து 381 கோடி 22 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்களை தற்பொழுது இஸ்ரேலுக்கு அமெரிக்கா விற்பனை செய்ய உள்ளது. இந்த விற்பனை தொடர்பாக மே 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், இந்த விற்பனைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளாராம். ஏற்கனவே மோதல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க கொடுக்கக்கடிய இந்த ஆயுதம் மேலும் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்த உதவும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

author avatar
Rebekal