அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் தொற்று..!அச்சத்தில் மக்கள்..!

அமெரிக்காவில் தற்போது கேண்டிடா என்ற ஆரிஸ் வகை பூஞ்சை நோய் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்காவின் டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் டி.சி பகுதியில்  வியாழக்கிழமை அன்று இந்த தொற்று  பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில் 101 பேருக்கும் டல்லாஸ் பகுதியில் 22 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். நோய் பாதித்தவர்களுக்கு ஆன்டிபயாடிக் சிகிச்சை அளித்து வருகின்றனர். இருந்தபோதிலும் இவர்களுக்கு உடல்நிலை சரியாகவில்லை.  இந்த நோயின் … Read more

அமெரிக்காவில் குழந்தைகள் பூங்காவில் ரசாயன கசிவால் 60 பேருக்கு பாதிப்பு..!

அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் நீர்ப்பூங்காவில் ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 60 பேர் பாதிப்படைந்துள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஸ்ப்ரிங் என்ற இடத்தில் குழந்தைகளுக்காக அமைந்துள்ள நீர்ப்பூங்காவில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 60 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தோல் எரிச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து வந்து, மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 26 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 39 பேர் சிகிச்சை … Read more

அமெரிக்க ஐடி நிறுவனத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல்;800 கடைகளை திறக்க முடியாமல் தவித்த ஸ்வீடன்…!

அமெரிக்க ஐடி நிறுவனத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்ததையடுத்து,ஸ்வீடன் 800 கடைகளை திறக்க முடியாமல் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஐடி நிறுவனத்தின் மென்பொருள் சப்ளையரான கசேயா மீதான ரன்சொம்வேர் (ransomware) சைபர் தாக்குதலுக்குப் பின்னர் ஸ்வீடனில் உள்ள கூப்பின் நிறுவனம் தனது 800 மளிகை கடைகளை திறக்க முடியாமல் தவித்தது.காரணம், அவற்றின் பணப் பதிவேடுகள் செயல்படவில்லை என்று நாட்டின் பொது ஒளிபரப்பாளர் தெரிவித்தார். மேலும்,இந்த சைபர் தாக்குதலால் கிட்டத்தட்ட 200 அமெரிக்க வணிகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இது … Read more

78 வயதான முதியவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்..!

78 வயதான வீழ்ச்சியடைந்த முதியவரை வீழ்ச்சி கண்டறியும் அம்சத்தின் வாயிலாக ஆப்பிள் நிறுவனம் கண்டுபிடித்து காப்பாற்றியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்க்கோ நகரில் முதியவர் ஒருவரின் உயிரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியுள்ளது. அமெரிக்காவில் உள்ள 78 வயதான மைக் யாகர் என்பவர் கீழே விழுந்து மூக்கில் பலமாக அடிப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஆப்பிள் வாட்ச்சிற்கு பதிலளிக்காததால் உடனடியாக ஆப்பிள் வாட்ச் 911 என்ற அவசர எண்ணுக்கு அழைத்துள்ளது. சம்மர்பீல்டு தீயணைப்பு துறையால் இவர் மருத்துவமனையில் … Read more

கோவாக்ஸின் தடுப்பூசி ஆல்பா, டெல்டா கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பான செயல்பாடு-அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம்..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசி தற்போது அதிகமாக பரவி வரக்கூடிய டெல்டா மற்றும் ஆல்பா கொரோனா வைரஸ்களுக்கு எதிராக திறம்பட செயல்படுவதாக அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸ் பிரிட்டன் மற்றும் இந்தியாவில் முதலில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் பாரத் பையோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் ரத்த மாதிரியை எடுத்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு குறித்து வெளியிட்டுள்ள … Read more

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு;காவல் அதிகாரிக்கு 22.6 ஆண்டுகள் சிறைத்தண்டனை…!

ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 48) என்ற கறுப்பினத்தவர், கள்ள நோட்டு வைத்திருந்ததாக கூறி அவரது கழுத்தில்  காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் முழங்காலை வைத்து அழுத்தினார்.இதனால் மூச்சுவிட முடியவில்லை என்று பிளாய்ட் கெஞ்சியும் அதிகாரி தனது காலை எடுக்கவில்லை.இதன்காரணமாக,மூச்சுத்திணறி … Read more

பலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் சோதனை – அமெரிக்க நிறுவனம் சாதனை..!

பிரமாண்ட பலூன் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தின் சோதனை முயற்சியில் ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனம் சாதித்துள்ளது. அமெரிக்காவில் புளோரிடாவை மையமாக கொண்ட ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம்,கோடியாக்கிலுள்ள பசிபிக் ஸ்பேஸ்போர்ட் வளாகத்தில் இருந்து “ஸ்பேஸ்ஷிப் நெப்டியூன்” என அழைக்கப்படும் பலூன் மூலம் விண்வெளிச் சுற்றுலா செல்லும் திட்டத்திற்கான சோதனை முயற்சியை மேற்கொண்டு,அதில் வெற்றிப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது,புளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுள்ள ஒரு பிரமாண்டமான ஹைட்ரஜன் பலூன் பூமிக்கு மேலே 20 கிலோ … Read more

தனது கின்னஸ் வெற்றியை முறியடிக்கும் முயற்சியில் உயிரிழந்த பைக் சாகச வீரர்..!

கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பைக் சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் தனது சாதனையை முறியடிக்கும் முயற்சியில் உயிரிழந்துள்ளார்.  அலெக்ஸ் ஹார்வில் சிறந்த பைக் சாகச வீரர். அமெரிக்காவை சேர்ந்த இவருக்கு 28 வயதாகிறது. இவர் பல பைக் சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். மேலும், பைக் சாகசத்தால் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில் தான் படைத்த சாதனையை தானே முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் அமெரிக்காவின் வாஷிங்க்டன் நகரில் இருக்கும் மோசஸ் ஏரி அருகே அவரது பயிற்சியில் … Read more

திமிங்கலத்தின் வயிற்றுக்குள் 40 வினாடிகள் இருந்தவர்;உயிர்பிழைத்த அதிசயம்..!

கடலுக்குள் இறால் பிடிக்க சென்ற மைக்கேல் பேக்கர்டு என்பவரை,ஒரு ஹம்ப்பேக் திமிங்கிலம் விழுங்கியது. அதிர்ஷ்டவசமாக,40 விநாடிகளுக்குள் திமிங்கலம் மைக்கேலை துப்பியதால் அவர் உயிர்பிழைத்தார். அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸில் வசிக்கும் 56 வயதான மைக்கேல் பேக்கர்டு என்பவர்,கடலுக்குள் நீந்தி இறால் பிடிக்க சென்றபோது,36 டன் எடையுள்ள ஒரு திமிங்கலம் அவரை விழுங்கியது. இதனையடுத்து,விழுங்கிய 40 விநாடிகளுக்குள் திமிங்கலம் மைக்கேலை துப்பியதால் அவர் உயிர் பிழைத்தார். மேலும் இதுகுறித்து,மைக்கேல் கூறுகையில்:”நான் கடலுக்குள் இறால் பிடிக்க சென்றபோது,ஒரு ஹம்ப்பேக் திமிங்கிலம் என்னை … Read more