நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம் வைரலாகும் வீடியோ

உத்திரபிரதேசத்தில் ஒரு பெண் கடைக்கு சென்றுவிட்டு வரும்பொழுது அங்குள்ள இளைஞர்களால்  தடுத்துநிறுத்தப்பட்டு அவளிடம் உள்ள சைக்கிளை  பறிக்கின்றனர் பின்னர் கிண்டல் செய்தும் ,கொச்சைவார்த்தைகளால் பேசியும்  அவளைவிடாமல் தடுக்கின்றனர்   ,எவ்ளவோ போரடிப்பார்த்தும் அவர்களிடம் இருந்து சைக்கிளை பெறமுடியாததால் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டாள் அந்த பெண் , இந்த காணொளி  இணையதளத்தில் வைரலாக வருகிறது .

ராமர் கோவிலை காட்டினால் மட்டுமே பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் – உ.பி. சாதுக்கள் குழு முறையீடு..!

உ.பி.யில் ராமர் கோவில் கட்டும் பணியில் காலம் தாழ்த்தப்பட்டு வருவது, சாதுக்கள் மற்றும் துறவிகள் மத்தியில் சீற்றத்தை அதிகரிக்க செய்து வருகிறது. இந்நிலையில், சாது திகம்பர அக்ஹர மஹந்த் சுரேஷ் தாஸ் தலைமையில் சாதுக்கள் மற்றும் துறவிகள் குழு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இன்று சந்தித்து பேசினர். முதல்வருடனான சந்திப்புக்கு முன்பாக பேசிய சாதுக்கள், அயோத்தியில் ராமர் கட்டும் பணி மிகவும் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆளும் பாரதிய ஜனதா அரசு, ராமர் கோவில் கட்டுமான பணிகளை … Read more

பிறந்த குழந்தையை காரிலிருந்து வீசிய பெண்..! உ.பி. யில் கொடூரம்..!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மிசாபர்நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் சன்ரோ கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு ஒரு வீட்டு வாசலில் நின்றது. காரில் இருந்த பெண் பிறந்த குழந்தையை வெளியே வீசினார். பின்னர் அந்த கார் வேகமாக அங்கிருந்து சென்று விட்டது. இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காமேராவில் பதிவானது. இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளானர். அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் … Read more

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கனமழையினால் மசூதியின் தூண் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக கனத்த மழை பெய்து வருகிறது. மழையின் எதிரொலியாக இங்குள்ள உன்னாவ் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மின்னல் தாக்குதல், மரங்கள் சாய்ந்து விழுந்த சம்பவங்கள் மற்றும் வீடுகள் இடிந்த விபத்துகளில் 57 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15 பேரும், பீகார் மாநிலத்தில் 19 பேரும், ஜார்கண்ட் மாநிலத்தில் 23 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச … Read more

மத்திய உள்துறை அமைச்சர்:ராஜ்நாத் சிங் மகனுக்கு கொலைமிரட்டல்..!!

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாஜக எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது தொடர்ந்து வருகிறது. அண்மையில், 10 லட்சம் ரூபாய் கொடுக்காவிட்டால் கொல்லப்படுவீர்கள் என, பாஜக-வை சேர்ந்த விக்ரம்சிங், மன்வேந்திரசிங், பிரகாஷ் பாண்டே உட்பட 12 எம்.எல்.ஏ-க்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் புகார் அளித்தனர். இதற்காக சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு … Read more

உ.பி முதலமைச்சர் யோகி-அல்ல போகி..!கடுமையாக விமர்சித்த உத்தவ் தாக்கரே..!!

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, அவரது காலணியாலேயே அடிக்க வேண்டும் என்று தோன்றியதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பல்ஃகார் சென்றிருந்த யோகி ஆதித்யநாத், சத்ரபதி சிவாஜி புகைப்படத்துக்கு மாலை அணிவித்தார். அப்போது காலில் அணிந்திருந்த காலணிகளை அவர் கழற்றவில்லை. இதுகுறித்து சிவசேனா பத்திரிக்கையான சாமனாவில் எழுதியுள்ள உத்தவ் தாக்கரே, யோகி ஆதித்யநாத் யோகி அல்ல போகி என்று கூறியுள்ளார். சிவாஜி சிலைக்கு காலணியுடன் மாலை அணிவித்த போது, அவரது … Read more

பிறந்து 244 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து புதிய கின்னஸ் உலக சாதனை..!

உத்தர பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை துறையின் தலைவராக இருப்பவர் மருத்துவர் ரிஸ்வான் அகமது கான். கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 19ந்தேதி ரியா குமாரி என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கான் தலைமையிலான மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 21ல், பிறந்து 244 நாட்கள் ஆன அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை ஒன்றை நடத்தியது. … Read more

சிறுமி பலாத்கார வழக்கில் ஆஜரான துணிச்சலான பெண் வழக்கறிஞர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவாக வாதாடுகிறார் பெண் வழக்கறிஞரான தீபிகா சிங் ரஜாவத். ஜம்முவில் 5 வயது மகளுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வழக்கில் தாம் ஆஜராவது தமது மகளுக்காகவும் சேர்த்துத்தான் என்றார். இவ்வழக்கில் இருந்து விலகி இருக்கும்படி தமக்கு மிரட்டல்கள் வருவதாக கூறிய தீபிகா சிங், மாநில வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தம்மை தகாத வார்த்தைகளால் திட்டியதாக மேலும் தெரிவித்தார்.

தங்கம் வென்ற தங்க தாரகை தாக்கப்பட்ட அவலம் ..!

காமன்வெல்த் விளையாட்டில்  தங்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை பூனம்யாதவ், சொந்த ஊரில் தாக்கப்பட்டார். சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு வந்து சேர்ந்த அவர், உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, பக்கத்து வீட்டாருக்கும் பூனம் யாதவின் உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, பக்கத்து வீட்டார் கற்களை வீசி தாக்கியதில் பூனம் யாதவும் காயமடைந்தார். பூனம் யாதவ் உறவினருக்கும், அருகே வசிப்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

என்ன துணிச்சல்…!!! அப்ப…பப்ப..!! வனத்துறையினரின் மோட்டார் சைக்கிள் ரேஸ்…!!!

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு இடத்தில் ஒரு பெண் சிறுத்தைப்புலி மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர். உடனே, வனச்சரகர் தயா சங்கர் திவாரிக்கு தகவல் தெரிவித்தனர். திவாரி, தனது உதவியாளர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பெண் சிறுத்தைப்புலியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கூண்டு அனுப்புமாறு மண்டல வன அதிகாரியிடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். ஆனால், கூண்டு வர தாமதம் ஆனது. சிறுத்தையின் உடல்நிலையும் மோசமாகிக்கொண்டிருந்தது. … Read more