மிக்ஜாம் புயலால்.. சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைப்பு..!

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம்  (Michaung) புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கட்கிழமை (டிசம்பர் 04) நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி … Read more

தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு..!

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான இளநிலை, முதுநிலை பட்ட, பட்டய, சான்றிதழ் படிப்பு தேர்வுகள் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. தொலைநிலை கல்வி திட்ட படிப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை, ஹால் டிக்கெட் ஆகியவை http://www.ideunom.ac.in/ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சற்று நேரத்தில் சென்னை பல்கலை..இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

கடந்த மாதம் ஆன்லைனில் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.    

மாணவிகள் பேராசிரிகளின் வீடுகளுக்கு செல்ல தடை -சென்னை பல்கலைக்கழகம்

கல்வி தொடர்பாக மாணவிகளை தங்களது வீடுகளுக்கு பேராசிரியர்கள்  அழைத்து செல்லக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் தங்களது கல்லூரி பேராசிரியர்களின்  வீடுகளுக்கு செல்வதால் அவர்களை பாலியல் சம்பந்தமாக குற்றங்கள் நடப்பதாக அவ்வப்போது புகார்கள் வருகிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை பல்கலைகழகம் கல்வி தொடர்பாக மாணவிகளை பேராசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்றும் வெளியில் தங்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது அவ்வாறு கல்வி சார்ந்து தங்க வேண்டுமென்றால் முன் … Read more