ஆப்கனில் பெண்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய தடை.! முடிவை திரும்ப பெற ஐநா வலியுறுத்தல்.!

அரசு சாராத தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதித்துள்ள முடிவை திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதார அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.  ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்கள் வசம் இருக்கிறது. அவர்கள் தான் அந்நாட்டை ஆண்டு வருகின்றனர். அவர்கள் அண்மையில், பெண்கள் உயர்கல்வி படிக்க தடை விதித்து இருந்தனர். இது உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, புதியதாக, அரசு சாராத தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதித்துள்ளனர். … Read more

உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டது- ஐக்கிய நாடுகள் அமைப்பு.!

உலக மக்கள் தொகை இன்று(நவ-15) 800 கோடியை தொட்டு விட்டது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு கணக்கிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் கணக்கீட்டின் படி உலகத்தின் மொத்த மக்கள்தொகை இன்று நவ-15இல் 800 கோடியை தொட்டு விட்டது. இது மனித வளர்ச்சியின் ஒரு மைல்கல் என்று கருதப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சமீபத்திய கணிப்பின்படி உலக மக்கள்தொகை 2030இல் 850 கோடியையும், 2050இல் 970 கோடியையும், 2100இல் 1040 கோடியையும் எட்டிவிடும் என்று தெரிவித்துள்ளது. வருடாந்திர உலக மக்கள்தொகை … Read more

சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி மறைவுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரங்கல்…!

சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி மறைவுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரங்கல். திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்டான் சுவாமி (84), எல்கர் பரிஷத் வழக்கில், கடந்த 2020-ஆம் ஆண்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு ஜாமின் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பழங்குடியினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஸ்டான் சுவாமிக்கு  உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் … Read more

முடிவிற்கு வந்த 15 ஆண்டு தடை….அடுத்து என்ன??கலகல ஈரான்_ஆத்திரத்தில் US…ஐ.நா., உஸ்..!

 ஐ.நாவின்  ஈரான் மீதான 15 ஆண்டு கால ஆயுதத் தடையானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு மற்றும்  தீவிரவாதத்தை ஊக்குவிப்பு என சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டதாக அந்நாட்டின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதித்தது உத்தரவிட்டது. ஐ.நாவின் இந்த தடையால் கடும் நெருக்கடிக்கு தள்ளபட்ட ஈரான், அணுசக்தியை ஆக்கப்பூர்வமாகவே பயன்படுத்துவோம் என்ற உத்தரவாதத்தினை கொடுத்தது. இதனால் அவ்வற்றின் மீதான் பொருளாதாரத் தடையை மட்டும் ஐநா விலக்கியது. ஆனால் … Read more

உலகை பார்க்கதுடிக்கும் பார்வைகள்….(World Sight Day) விழித்துக்கொண்டால் விழிப் பிரச்சணை இல்லை!

உலக அழகையும் தன்முடன் உள்ளவர்களையும் பார்க்க துடிக்கும் அந்த பார்வைகளின் ஏக்கத்தை ஒரு போதும் எழுத்துக்களால் சொல்லமுடியாது.சில மணி துளிகள் மின்சாரம் தடைபட்டாலே நம்மால் இருட்டில் இருக்க மாட்டோம் ஆனால் வாழ்நாள் முழுவதும் இருட்டில் வாழும் அந்த பார்வைகள்…அவற்றிற்கு ஆதரவும்,அன்பு, அனுசரனை இவைகளே அவர்களுக்கு தற்போது வெளிச்சமாக இருந்து வருகிறது. அத்தகையோர்க்காக ஜ.நா விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அக்.,8 உலக பார்வைகள் தினத்தை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உலக சுகாதார நிறுவனம் கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு … Read more

தீவிரவாதம் என்றாலே நீலிக்கண்ணீர் நாடகம்!ஜ.நாவில் பாக்., விளாசிய இந்தியா

தீவிரவாதம் குறித்த விவாதம் எப்போது நடைபெற்றறாலும் அதற்கு  தான் பலியாகி விட்டதாக பாகிஸ்தான் நாடகமாடி வருவது வாடிக்கையாகி விட்டதாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜ.நா மனித உரிமை கவுன்சிலில் தீவிரவாதம் குறித்த விவாதம் குறித்து வெளியிட்ட ஜ.நாவுக்கான இந்திய செயலர் விமார்ஷ் ஆர்யன்,ஐ.நாவில்  கூறியதாவது: பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக சாடினார்.சர்வதேச நாடுகளின் கவனத்தை தவறாக திசை திருப்பும் திட்டத்துடனேயே பாகிஸ்தான் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று கூறிய அவர் சொந்த நாட்டில் … Read more

ஆப்கானிஸ்தானில் 6,500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் – ஐ.நா அறிக்கை.!

ஆப்கானிஸ்தானில் 6,500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக United Nations அறிக்கை கூறுகிறது. ஆஃப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6000 முதல் 6500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளதாக United Nations அறிக்கை கூறுகிறது. ஐ.நா சபையின் ஆய்வில் உதவி மற்றும் தடைகள் கண்காணிப்பு குழு தனது 26ஆவது ஆய்வறிக்கையை சமீபத்தில் சமர்பித்தது. மேலும் ஆஃப்கானிஸ்தானில் அல் காய்தா இயக்கம் தாலிபான்கள் உதவியுடன் 12 மாகாணங்களில் இயங்கி வருவதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. போரில் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு வெளிநாட்டு பயங்கரவாதிகளை அழைத்து … Read more

#India#ஐ.நாவில் அங்கிகாரம்-அறிக்கை அசத்தல்

ஜ.நா இறுதி செய்துள்ள தீர்மானத்தின் வரைவு அறிக்கை இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபையின் 75வது ஆண்டு விழாக்காக இறுதி செய்யப்பட்ட தீர்மானத்தின் வரைவு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஐ.நா சபை  எனப்படும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக கடந்த மாதம் தேர்வாகிய இந்தியா வரும், 2021ம் ஆண்டு, ஜனவரியில் இருந்து,2 ஆண்டுகளுக்கு  உறுப்பினராக இருக்கும். இந்நிலையில் தான்  ஐ.நாவின், … Read more

மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் – நேத்ரா

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன். உலகம் முழுவதும் வறுமையே இருக்கக்கூடாது என்பதே எனது ஆசை என்று மதுரை சலூன்கடைக்காரர் மகள் நேத்ரா தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று கூறியுள்ளார். ஐ.நா.மாநாட்டில் பேச வாய்ப்பு கிடைத்தது பற்றி மதுரை மாணவி நேத்ரா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது இதனை தெரிவித்துள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, பிரதமர் மோடி’மான் … Read more

ஐநாவில் இந்தியாவுக்கான நிரந்தர தூதராக சென்னையை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்.!

ஐ.நா-வில் இந்தியாவுக்கான நிரந்தர தூதராக பணியாற்றி வந்த சயது அக்பரூதின் ஓய்வு பெற்றதை அடுத்து, சென்னையை சேர்ந்த IAS அதிகாரி டி.எஸ்.திருமூர்த்தி அந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் 2016-ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கான நிரந்தர தூதராக பணியில் இருந்து வந்த சயது அக்பரூதின் ஓய்வு பெற்றார். அவர் ஐ.நாவில் பல்வேறு முக்கிய விவாதம் மற்றும் பிரச்சினைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை பலமாக எடுத்துரைத்தார்.0 அதிலும் முக்கியாமாக பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமதை சேர்ந்த … Read more