இன்று வரலாற்றில் இயற்பியல் மேதை சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பிறந்த தினம்…!!

மார்ச் 14, 1879 – ஆல்பர்ட் ஐன்ஸ்டின் என்ற இயற்பியல் மேதை சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானி ஆவார். இவர் 1879 – ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 – ஆம் நாள் ஜெர்மனி நாட்டில் பிறந்தார். இவர் தனது மூன்று வயது வரை பேசாதவராகவே இருந்தார். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்து யூதர்களை கொடுமைப்படுத்தத் துவங்கியதும் ஐன்ஸ்டின் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். இவரின் புவியீர்ப்பு தத்துவம், சார்பியல் கொள்கை, ஒளிமின் விளைவிற்கு இவர் அளித்த … Read more

வரலாற்றில் இன்று தான் யுரேனஸ் கொள் கண்டறியப்பட்டது…!!

மார்ச் 13, 1781 – வரலாற்றில் இன்று இங்கிலாந்தை சேர்ந்த சர் வில்லியம் செர்சல் என்ற வானியலாளரால் யுரேனஸ் கொள் கண்டறியப்பட்டது. யுரேனஸ் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாக பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாக கருதவில்லை.

வரலாற்றில் இன்று– இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக் கொன்றார்…!!

மார்ச் 13, 1940 வரலாற்றில் இன்று– இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் லண்டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் இடம்பெற்ற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் ஜாலியன்வாலா பாக் படுகொலைகளுக்கு காரணமான பஞ்சாப் மாநில முன்னாள் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக் கொன்றார். குறிபார்த்து ஆறு முறை சுட்டார். இறந்து போனான் டயர் . அந்த வேலை முடிந்ததும் ஓடாமல் கம்பீரமாக அங்கேயே நின்ற உத்தம் சிங் “என்னுடைய வேலை முடிந்தது ; என் … Read more

வரலாற்றில் இன்று தான் மும்பை தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன…!!

வரலாற்றில் இன்று மார்ச் 12, 1993ஆம் ஆண்டு இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையை நிர்மூலமாக்கும் வகையில் பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயமடைந்தனர் மதியம் 1.33 மணியில் இருந்து 3.40 மணிவரை அடுத்தடுத்து இந்த குண்டு வெடிப்புகள் நடந்து மும்பையை அதிர வைத்தது. மும்பை ஸ்டாக் எக்சேஞ்ச், கதா பஜார், சேனாபவன், செஞ்சுரி பஜார், மாகிம், ஏர் இந்தியா கட்டிடம், ஜவேரி பஜார், ஓட்டல் சீராக், பிளாசா தியேட்டர், … Read more

வரலாற்றில் இன்று தான் மகாத்மா காந்தி வெள்ளையரின் உப்பு சட்டத்தை எதிர்த்து உப்பு சத்தியாகிரகம் செய்தார்…!!

வரலாற்றில் இன்று மார்ச் 12, 1930. மகாத்மா காந்தி வெள்ளையரின் உப்பு சட்டத்தை முறியடிக்கும் நோக்கோடு தண்டி யாத்திரையை துவக்கிய நாள் உப்பு சத்தியாகிரகம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பதுகாலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த … Read more

ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரொக்ராட் எனப்படும் சென் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து இருந்து மாஸ்கோவுக்கு மாற்றப்பட்டது

மார்ச் 11, 1918 – வரலாற்றில் இன்று– ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரொக்ராட் எனப்படும் சென் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து இருந்து மாஸ்கோவுக்கு மாறியது. அதற்கு முன்னர் ரஷ்யாவின் ஜார் மன்னர்கள் 1712 ல் சென் பீட்டர்ஸ்பேர்க்கை தலைநகராக்கும் வரை இதுவே தலைநகராக இருந்தது. 1918 ல் மீண்டும் ரஷ்யாவின் தலைநகராக்கப்பட்டது. 1917 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் ரஷ்ய குடியரசின் தலைவர் பொறுப்பேற்ற விளாடிமிர் லெனின் மாஸ்கோவை மீண்டும் ரஷ்யாவின் தலைநகராக்கினார்.

3000 ஆண்டுகளுக்கு ஒருமுறை விண்வெளியில் நிகழும் அதிசயம்

வரலாற்றில் இன்று – மார்ச் 10, 1982 – சூரியக் குடும்பத்திலுள்ள எட்டு கோள்கள் அனைத்தும் தத்தம் சுற்றுப்பாதையில் சூரியனின் ஒரே பக்கத்துக்கு வந்தன. 3000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோல நடக்கும் என ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றில் இன்று தான் உலகின் முதலாவது தொலைபேசி அழைப்பு பேசப்பட்ட தினம்…!

வரலாற்றில் இன்று – மார்ச் 10, 1876 உலகின் முதலாவது தொலைபேசி அழைப்பு பேசப்பட்ட தினம் – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். தன் உதவியாளரை தொலைபேசி மூலம் அழைத்து “மிஸ்டர் வட்ஸன் இங்கே வாருங்கள்” என்றார். அவைதான் தொலைபேசியில் பேசப்பட்ட முதல் வார்த்தைகள். அமெரிக்காவில் ஏறக்குறைய ஒரே காலத்தில் மூன்று படைப்பாளிகள் தொலைபேசியை ஆக்க முற்பட்டனர் யார் முதலில் படைத்தவர் என்ற வழக்குப் போட்டியில் பெல் ஒருவரே வெற்றி பெற்றார். … Read more

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மிக அதிகமான அஞ்சல் தலைகளை வெளியிட்டது சோவியத் யூனியன்…!!

மார்ச் 8 – சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல நாடுகள் சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளன. அவற்றுள் சில மட்டும் இங்கே தரப்பட்டுள்ளன. பழைய சோவியத் யூனியன்தான் தற்போதைய ரஷ்யா ஒன்றியம் மிக அதிகமான (17 ) அஞ்சல் தலைகளை வெளியிட்டது.

இன்று உலக மகளிர் தினம்…!!

மார்ச் 8 – இன்று உலக மகளிர் தினம் (International Women’s Day). ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது. அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. … Read more