குற்றவாளிகளுக்கு மட்டும் தான் மனித உரிமையா.? காவலர்களுக்கு இல்லையா.? : நீதிபதி கிருபாகரன் கேள்வி…!!

காவல்துறையினர் பிரச்சினைகளை தீர்க்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்.?. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நிபுணர் குழுவினர் பட்டியலை வரும் 22 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். பட்டியலை சமர்பிக்க்கவிட்டால் உள்துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் அதிகாரிகள் வீட்டில் எவ்வளவு காவலர்கள் வேலை பார்க்கின்றனர்.?. குற்றவாளிகளுக்கு மட்டும் தான் மனித உரிமையா.? காவலர்களுக்கு இல்லையா.? : நீதிபதி கிருபாகரன் கேள்வி.

தமிழகத்தில் நடந்த காவலர்கள் தற்கொலைக்கு காரணம் இது வா…?? சட்டமன்ற பேரவை பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி…

தமிழகத்தில் நடந்த காவலர்கள் தற்கொலை என்பது குடும்ப, உடல்நிலை, காதல் உள்ளிட்ட பிரச்சினைகளால் நிகழ்கிறது. காவலர்கள் தற்கொலையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணிச்சுமையை கருத்தில் கொண்டு காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடல்நலத்தை பேணிக்காக்க யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. காவலர்கள் தற்கொலை தொடர்பாக தமிழக சட்டமன்ற பேரவையில் முதலமைச்சர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

உணவு தானிய உற்பத்தியில் தமிழக அரசு சாதனை…!!

உணவு தானிய உற்பத்தியில் தமிழக அரசு சாதனை : “கிருஷி கர்மான் ” விருது பெற்றது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமியிடம் “கிருஷி கர்மான் ” விருதினை அமைச்சர் துரைக்கண்ணு காண்பித்து வாழ்த்து பெற்றார்.

2015-2016 ஆம் ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக தமிழக அரசுக்கு ‘கிருஷி கர்மான்’ விருது…!!

2015-2016 ஆம் ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக தமிழக அரசுக்கு ‘கிருஷி கர்மான்’ விருது வழங்கப்பட்டது. டெல்லியில் பூசா வளாகத்தில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த “கிருஷி உன்னதி மேளாவில்” தமிழக அரசுக்கான விருதை பிரதமர் மோடியிடம் பெற்றார் அமைச்சர் துரைக்கண்ணு. நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட தானிய உற்பத்தியில் தமிழக அரசு சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதிகள் மத்தியஸ்தர்கள்…!!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி.சண்முகம், கே.எம்.பாஷா, பால்வசந்தகுமார் ஆகிய 3 பேரில் ஒருவரை நியமிக்க தொழிற்சங்கங்கள் தங்களது தரப்பின் மூலம் கோரிக்கை வைத்துள்ளன.  

ஹார்டுவேர்டு பல்கலைகழகத்தில் தமிழ் மொழிக்கான நிரந்தர இருக்கை அமைக்க பள்ளி மாணவர்கள் ரூ. 7,50,000 நிதியுதவி..!!

  ஹார்டுவேர்டு பல்கலைகழகத்தில் தமிழ் மொழிக்கான நிரந்தர இருக்கை அமைப்பதற்கான திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவர்கள் சுமார் 600 பேர்,தங்களால் இயன்ற ரூ.20 முதல் ரூ.5500 வரை செலுத்தி சேமித்த ரூ.7,50,000வை தங்களது பங்களிப்பாக தமிழக தமிழ் மொழி மற்றும் கலாச்சார அமைச்சர் மா.பா பாண்டியராஜன் அவர்களிடம் கொடுத்தார்கள். இந்த பணத்தை நான் பெருமிதம் அடைகிறேன் என அமைச்சர் கூறியுள்ளார்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் கூடாது-தமிழக பத்திரப்பதிவுத்துறை…

தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள், பாத்தியப்பட்டவர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை என்று கூறியுள்ள பத்திரப்பதிவுத்துறை, இடைத்தரகர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடைத்தரகர் மூலம் அணுகினால் வேலை சீக்கிரம் முடிந்து விடும் என்பதால் பொது மக்கள் அவர்களை தேடி செல்கின்றனர். இதன் காரணமாக நிறைய லஞ்சமும், ஊழலும் நடப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை தடுக்கும் முயற்சியாகவே பத்திரப்பதிவு ?அலுவலகத்தில் இடைத்தரகர்களுக்கு அனுமதி இல்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த … Read more

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் …!!

மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.இந்த நிகழ்ச்சியை மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ,மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஒலிம்பிக் தீபம் ஏற்றி, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தொடங்கி வைத்தனர் இதில் 500 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.  

ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் இனாம் கொடுக்கப்படும்..!

தமிழகம் முழுவதும் 1 கோடி 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் பழனிசாமி இன்று துவங்கி வைத்தார். 1 கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டு அடிநீளக் கரும்புத்துண்டு ஆகியவை இந்த பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றவர்கள் அனைவருக்கும் இனிய … Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 20 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 434 அரசு பேருந்துகள் உள்ளது இதில் 84 பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கொண்டு சுமார் 20 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.