ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை தேவை – ஓபிஎஸ்

ops

15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இன்றும் 2வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த … Read more

TNGIM2024 : எந்தெந்த துறைகளில் எத்தனை கோடிகள் முதலீடு.? எத்தனை லட்சம் வேலைவாய்ப்புகள்.?

TNGIM2024

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று மற்றும் இன்று (ஜனவரி 7, 8) உலக தொழிலாளர் மாநாடு (Tamil Nadu Globel Investors Meet – TNGIM 2024) நடைபெற்றது. நேற்று தொடக்க நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டை துவங்கி வைத்தார். மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். இரண்டு நாள் மாநாட்டில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. TNGIM2024 : உலக முதலீட்டாளர்கள் … Read more

ஐபிஎஸ் அதிகாரிகள்16 பேருக்கு பதவி உயர்வு… 32 பேர் பணியிட மாற்றம்

தமிழக அரசு 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர் வழங்கியும், 32 ஐ பி எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக புக்யா சினேக பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக வி. சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை நகர் வடக்கு சட்ட ஒழுங்கு துணை ஆணையராக ஜி.எஸ் அனிதா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மத்திய மண்டல பொருளாதார குற்றபிரிவு எஸ்.பி.யாக  எம். கிங்ஸ்லின் நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

மகளிர் உரிமைத் தொகை: மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு…ஜன.10ல் வரவு!

Women's Entitlement Amount

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்த 2 லட்சம் பேருக்கு ஜன.10ல் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் குறிப்பிட்ட மிக முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தமிழகத்தில் இருந்து முதற்கட்டமாக 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். 1.63 கோடி பேரில் இருந்து 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு … Read more

போக்குவரத்து ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு!

tn transport

ஊதியம், காலி பணியிடங்கள் நிரப்புதல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில அரசின் நிதியுதவி, ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்து தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இந்த சூழலில், தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த சமயத்தில், பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் ஜனவரி 9ம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக  போக்குவரத்துத்துறை … Read more

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டம்..!

கடந்த 2020-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக  அறிவித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் , புதுக்கோட்டை மாவட்டங்களில் குறிப்பிட்ட  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டது. பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்..! இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்ப்பது தொடர்பாக கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் … Read more

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்குங்க! பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

dr ramadoss

இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கபடும் என தமிழக அரசு அறிவித்து இருக்கும் நிலையில், பொங்கல் பரிசு தொகை 3,000 வழங்கவேண்டும் 1,000 வழங்கவேண்டும் என பல அரசியல் தலைவர்கள் கேட்டுக்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் பரிசாக 3,000 வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அவரை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  … Read more

பொங்கல் பரிசு தொகை ரூ.3,000 வழங்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

O Panneerselvam - pongal parisu

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீட்டு இருக்கிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை … Read more

1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை! பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு.!

pongal parisu

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீட்டு இருக்கிறது. இது குறித்து வெளியிடபட்டுள்ள அறிவிப்பில் ” பொங்கல் 2024 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் – இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் … Read more

தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன்… வெள்ள பாதிப்பு குறித்து முக்கிய ஆலோசனை.!

Central Minister Nirmala Sitharaman visit Thoothukudi

தென் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் பல பகுதிகள் வெள்ளத்தால் பலத்த சேதமடைந்தன. குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் நீர்வழி பகுதிகளில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி, பெரும்பாலான குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. கடந்த பத்து நாட்களாகியும் இன்னும் பல்வேறு இடங்களில் இந்த வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதனை அகற்றும் பணியில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அரசியலமைப்பினர் தன்னார்வலர்கள் … Read more