பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டம்..!

கடந்த 2020-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக  அறிவித்து சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் , புதுக்கோட்டை மாவட்டங்களில் குறிப்பிட்ட  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் வரம்புக்குள் கொண்டு வரப்பட்டது.

பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்..!

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்ப்பது தொடர்பாக கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சேர்க்கப்பட்டு அதற்கான அரசனையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுத்தல் ,துரப்பாண பணி ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
murugan