வழக்கறிஞர் என்று கூறி மோசடி செய்தவரின் வீட்டிலிருந்து கற்சிலைகள் கண்டெடுப்பு..!

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த ஆண்டகளூர் கேட்பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரிடம் வின்ஸ்டன் சர்ச்சில் என்பவர் 35 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். கடனை திருப்பி கேட்ட போது தன்னை வழக்கறிஞர் என்று கூறி சர்ச்சில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் வின்ஸ்டனின் நடத்தையில் சந்தேகமடைந்து ரமேஷ், விசாரித்ததில் அவர் வழக்கறிஞரே இல்லை என்பது தெரியவந்ததையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ரமேஷின் கண்ணில் படாமல் போக்கு காட்டியுள்ளார் வின்ஸ்டன் சர்ச்சில்.  தனது ஆதரவாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை வின்ஸ்டன் … Read more

திருநெல்வேலியில் ATM மையத்தில் பணமெடுத்த வாடிக்கையாளரிடம் நூதன முறையில் பணம் திருடிய ஆனந்தகுமார் கைது

நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் தாலுகா அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரில் தனியார் வங்கியின் ATM மையத்தில் பணமெடுத்த வாடிக்கையாளர் தங்கபழம் என்பவரிடம் நூதன முறையில் பணம் திருடிய ஆனந்தகுமார் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.மேலும் அவர் திருடிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருடிய இடத்தில் திருடன் செய்த செயல்… சர்ப்ரைஸ் கொடுத்த போலீஸ்

திருட சென்ற இடத்தில் இரவு முழுவதும் தூங்கிவிட்டு பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் ஸ்காட்லாண்டில் நடந்துள்ளது. ஸ்காட்லாண்ட் தலைநகர் எடின்பர்க்கில் ஒரு வீட்டில் திருடன் ஒருவன் கொள்ளையடிக்க சென்றுள்ளான். கொள்ளையடித்த பொருட்களை எடுத்துச் செல்லாமல் வீட்டில் இருந்த உணவை சாப்பிட்டு அசதியில் தூங்கியுள்ளான். இவன் கொள்ளையடிப்பதை நடுஇரவிலேயே தெரிந்த காவல்துறை அவனை காலையில் தான் கைது செய்துள்ளனர். திருடனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவே அவர்கள் காலையில் கைது செய்திருக்கிறார்களாம். இந்த சம்பவத்தை பற்றி ஸ்காட்லாண்ட் போலிசார் தங்களது சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர் … Read more