சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும் வேலைகளை இயந்திரங்கள் மூலம் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை யதார்த்தமாக மாற்றிய நாடு இது. இப்போது மீண்டும் ஒருமுறை உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தும் ஒன்றைச் செய்துள்ளது. அது என்னவென்றால், சீனாவில் உள்ள சாங்காய் நகரில் கிங்ஹுட் குழு என்ற நிறுவனம் சார்பில், 30 நிமிடங்களில் தங்கத்தை பணமாக மாற்றும் ‘GOLD ATM’ அறிமுகம் […]
சென்னை : மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவின்படி, வரும் மே 1, 2025 முதல், மாதாந்திர இலவச பரிவர்த்தனை எல்லைக்கு மேல் ஏடிஎம்-களில் பணம் எடுக்கும் போது வங்கிகள் ரூ.23 வரை கட்டணம் விதிக்கலாம் என்று அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் ஸ்டாலின், மக்களை வங்கி கணக்குகள் தொடங்க ஊக்குவித்த மத்திய அரசு, பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம், குறைந்த இருப்புக்கு அபராதம் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தற்போது ஏடிஎம் பணம் எடுப்பதற்கும் […]
நாமக்கல் : கேரளாவில் ATM-களில் கொள்ளையடித்த கொள்ளைக்கும்பல் தப்பி வந்த கண்டெய்னர் லாரி நாமக்கல் – பச்சாபாளையம் அருகே பிடிபட்டது. பச்சாபாளையம் அருகே லாரி பிடிக்கப்பட்டு கண்டெய்னரை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளையர்கள் தாக்க, போலீசார் பதிலுக்கு துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். அதில், ஒரு கொள்ளையன் உயிரிழந்தனர். பின்னர், ஓட்டுநர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர், அந்த லாரியின் கண்டெய்னர் பெட்டியை திறந்து பார்க்கையில், அதனுள்ளே ஒரு சொகுசு கார் இருந்ததும், அதிலும் கொள்ளையர்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. […]
நாக்பூரில் உள்ள ஏடிஎம்மில் 5 மடங்கு கூடுதல் பணம் வருகிறது என செய்தி பரவியதால் அலைமோதியது மக்கள் கூட்டம். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாடிக்கையாளர் ஒருவர் தான் எடுக்க வந்த பணத்தை விட 5 மடங்கு கூடுதல் பணம் ஏடிஎம் இயந்திரத்தில் வந்ததை தொடர்ந்து, அந்த ஏடிஎம்-மிற்கு வெளியே ஏராளமானோர் பணம் எடுக்க திரண்டுள்ளனர். அதாவது, ஒரு நபர் ஏடிஎம்மில் இருந்து ரூ.500 எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், […]
ATM மையங்களில், credit மற்றும் debit கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வாங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் தெரிவித்துள்ளார். நம்மில் அதிகமானோர் பணம் எடுப்பதற்காக வங்கிகளை அணுகாமல், நமது credit மற்றும் debit கார்டுகளை பயன்படுத்தி தான் ATM-களில் பணம் எடுப்பதுண்டு. ஆனால், இந்த முறைகளிலும் பல மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த […]
இன்று முதல் இலவச ஏடிஎம் பண பரிவர்த்தனையை மேல் மேற்கொள்ளளும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் ரூ.20 இருந்து ரூ.21 ஆக உயர்த்தப்படுகிறது. இன்று முதல் இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பை தாண்டினால் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த ஜூன் மாதம், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஜனவரி 1 முதல் ஏடிஎம்களில் இருந்து மாதாந்திர இலவச பரிவர்த்தனை மேல் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு கட்டணத்தை அதிகரிக்க வங்கிகளுக்கு அனுமதித்தது. இந்நிலையில், இன்று முதல் ஏடிஎம்மில் இலவச பரிவர்த்தனை […]
வரும் ஜனவரி-1 முதல் அதிகரிக்கும் ஏ.டி.எம் கட்டணம். இன்று அதிகமானோர் வங்கிக்கு சென்று பணம் எடுப்பதை விடுத்து, ஏடிஎம் மூலமாக தான் பணம் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து, ஒரு மாதத்திற்கு 5 முறை ஏடிஎம்-ல் கட்டணம் இல்லாமல் பணத்தை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம். அதன்படி, வரைமுறையை தாண்டி வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் […]
மதுரை:டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது வெட்கக்கேடான ஒரு நிகழ்வு என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில்,அதனை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதனையடுத்து,இந்த புகார் தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில்,இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி […]
அக்டோபர் 1-ம் தேதி முதல் ATM-ல் பணம் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு. இன்று அதிகமானோர் ஏடிஎம் மூலமாக தான் பணம் எடுப்பதுண்டு. அந்த வகையில், பல இடங்களில் ஏடிஎம் இருந்தாலும், ஏடிஎம்களில் பணம் இருப்பதில்லை. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி, அக்டோபர் 1-ம் தேதி முதல் ATM-ல் பணம் இல்லையென்றால், வங்கிகளுக்கும், வொயிட் லேபிள் நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு […]
ஏ.டி.எம்-இல் தவறவிடும் வைஃபை கார்டுகளை பயன்படுத்தி பல்லாயிரங்களை கொள்ளையடித்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை கோயம்பேடு சின்மயா நகரை சேர்ந்தவர் மனோகரா. இவர் அங்கு இருக்கக்கூடிய ஏ.டி.எம். சென்றுவிட்டு திரும்பும் போது தவறுதலாக அவருடைய வைஃபை கார்டை மறந்து வைத்து விட்டு சென்றுள்ளார். இந்த வைஃபை கார்டில் 25,000 பணம் எடுத்திருப்பதாக மனோகராவுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை சைபர் கிரைம் போலீசார் விசாரணை […]
ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக பெரியமேடு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல். தமிழகம் முழுவதுமுள்ள பல எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம் மிஷினில் ஒரு கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சவுகத் அலி எனும் இந்த கொள்ளைக் கும்பலின் தலைவனை தவிர மற்ற மூவரையும் […]
தமிழகத்திற்கு வந்து ஏடிஎம்களில் கொள்ளையடிக்கும் போது பைக் ஓட்டுவதற்காக தனக்கு 1 லட்சம் தந்ததாக கைது செய்யப்பட்ட கொள்ளையன் வீரேந்தர் வாக்குமூலம். தமிழகத்தில் உள்ள பல எஸ்.பி.ஐ வங்கி ஏடைம் மையங்களை குறி வைத்து கடந்த மாதம் 17 முதல் 19 ஆம் தேதி வரை நூதன முறையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் 1 கோடிக்கும் மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில், கொள்ளையர்கள் யார் […]
இன்று முதல் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அல்லது எஸ்பிஐ வங்கியின் ஏ.டி.எம்மிலிருந்து ஒரு மாதத்திற்கு நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 15 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி எஸ்.பி.ஐ-யில் வங்கி கணக்கு வைத்திருக்க கூடிய வாடிக்கையாளர்கள் இலவசமாக 4 முறை பணம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எஸ்.பி.ஐ […]
எஸ்பிஐ டெபாசிட் வசதியுள்ள ஏடிஎம்மில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால், எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் ஏடிஎம்மில் தற்காலிகமாக பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஏடிஎம்களில் டெல்லியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் நூதன முறையில் பணம் திருடி உள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையில் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து சென்னையில் உள்ள தரமணி, வடபழனி, வேளச்சேரி ஆகிய பகுதிகளிலுள்ள ஏ.டி.எம்களில் சென்சாரை மறைத்து இந்த இளைஞர்கள் பணம் திருடி உள்ளது அம்பலமாகியுள்ளது. கடந்த 19ஆம் தேதி […]
ஏடிஎம் களில் பணம் எடுத்தல் தொடர்பாக,வாடிக்கையாளர் கட்டணம் உள்ளிட்ட நான்கு விதிமுறைகளை,ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியானது (ஆர்.பி.ஐ.) ஏ.டி.எம்.மூலமாக பணம் எடுத்தல் தொடர்பான சில முக்கிய மாற்றங்களை வியாழக்கிழமையன்று அறிவித்தது.அதன்படி,இலவச வரம்புக்கு அப்பாற்பட்ட பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போது சம்மந்தப்பட்ட வங்கிகளால் பணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஏடிஎம் களில் பணம் எடுத்தல் தொடர்பான நான்கு விதிமுறைகள்: சொந்த வங்கியில் இருந்து ஐந்து இலவச பரிவர்த்தனைகள்: ஒரு ஏடிஎம் பயனருக்கு,ஐந்து இலவச பரிவர்த்தனைகளானது (பணம் எடுத்தல் அல்லது […]
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் இலவச ஏடிஎம் பண பரிவர்த்தனையை மேல் மேற்கொள்ளளும் ஒவ்வொரு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் ரூ.21 ஆக உயர்த்தப்படுகிறது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒரு வங்கியின் வாடிக்கையாளர் அதே வங்கியின் ஏடிஎம் மூலம் மாதம் 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பணப்பரிவர்த்தனை கட்டணமில்லாமல் செய்யலாம். இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள […]
ஹைதராபாத்தில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் காயம். சைபராபாத் போலீஸ் எல்லைக்குட்பட்ட குகட்பள்ளியில் உள்ள எச்.டி.எஃப்.சி வங்கி ஏடிஎம்மில் வங்கி ஊழியர்களால் பணத்தை நிரப்பி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு பாதுகாவலர் மற்றும் வங்கி அதிகாரி காயமடைந்தனர். காயமடைந்த இருவருமே மருத்துவமனைக்கு அழைத்து செல்லபப்ட்டனர். அங்கு அவர்களின் நிலை சீராகிவிட்டதாக கூறப்படுகிறது. கொள்ளையர்கள் பணத்தை திருடி கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். […]
மேற்கு டெல்லியின் மடிபூர், கீர்த்தி நகர் மற்றும் நாரைனா விஹார் ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை நான்கு மணி நேரத்திற்குள் பைக் மற்றும் காரில் வந்த சில மர்ம நபர்கள் மூன்று ஏடிஎம் கொள்ளையடித்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த மர்ம நபர்களின் அடையாளத்தை சனிக்கிழமை இரவு வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், இது ஹரியானாவில் உள்ள மேவாட்டைச் சேர்ந்த ஒரு கும்பலின் வேலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பஞ்சாபி பாக், கீர்த்தி நகர் மற்றும் நாரைனா […]
புதுச்சேரி மாவட்டத்தில் ATM-ல் பணம் எடுக்கத் தெரியாதவரிடம் 50,000 மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாவட்டம் கிருமாம்பாக்த்தில் வசித்து வந்தவர் லட்சுமணன், இவர் கிருமாம்பாக்த்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு ATM- ல் பணம் எடுக்கத்தெரியாததால் பணம் எடுக்க தெரிந்தவர்களை அழைத்து வந்து செலவிற்காக பணம் எடுத்து வந்துள்ளார், அந்த வகையில் தனது உறவினர் வீடிற்கு சென்று தனது வீட்டிற்கு செல்லும் போது பணம் எடுக்க ஒரு நபரிடம் […]
அகமதாபாத்தின் ஜஷோதனகரில் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் தீ விபத்து ஏற்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ஜஷோதனகரில் உள்ள இந்தியன் வங்கிக்கு வெளியே இரண்டு பண விநியோக இயந்திரங்களும், ஒரு பாஸ் புக் பிரிண்டரும் இயந்திரமும் இருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு ஒரு தீயணைப்பு வாகனம் விரைந்து வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதனால், ஏடிஎம்-க்கு அடுத்ததாக அமைந்துள்ள வங்கி கிளைக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் […]