#HeavyRains: சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய கன மழையும் … Read more

மருத்துவமனையில் புகுந்த மழைநீர்..பொதுமக்கள் கடும் அவதி..!

வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. இதனால், சென்னையில் எழும்பூர், கோயம்பேடு, மெரினா, காசிமேடு, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒருமணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் இருந்த குழந்தைகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனை..!#Chennai #rains … Read more

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 5 மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது. இதனால், 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 48 மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. … Read more

மத்திய இந்திய பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

மத்திய இந்தியாவில் கனமழை பெய்யும் என்று ஐஎம்டி கணித்துள்ளது அந்த அவகையில் டெல்லியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று மாலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஐந்து நாட்களில் நாட்டின் மத்திய பகுதிகளில் மழை பெய்யும்  மேற்கு இமயமலை பகுதி மற்றும் மத்திய இந்தியா உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று வரை பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் … Read more

தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு!

தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் நீர் தேவை குறைந்துள்ள காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்கள் அனைத்திலும் தொடர்ச்சியான மழை பெய்து வருவதால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே கடந்த 15ம் தேதி நீர்திறப்பு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. மேலும் 16 ஆம் … Read more

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி வடக்கு மற்றும் தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் கர்நாடகத்தை ஒட்டி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு மற்றும் தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஓரிரு முறை இடைவெளி விட்டு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், ராமேஸ்வரம், சேலம், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.