#HeavyRains: சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

தற்போது, சென்னையில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.