வங்கி திவால் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

 வங்கி திவால் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  இன்று நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மாநிலங்களவையில் வங்கி திவால் சட்ட திருத்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஒத்தி வைப்பதற்கான திருத்தம் ஆகும்.அதாவது,2020-ஆம் ஆண்டு கடன் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்டத்தை திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டமானது தொழில் நிறுவனங்களை கருத்தில் … Read more

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை கண்டிப்பாக வழங்கப்படும் – நிர்மலா சீதாராமன்

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை கண்டிப்பாக வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்   நாளான இன்று நடைபெற்று வருகிறது. அப்பொழுது மாநிலங்களவையில்  மத்திய அரசு,நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநில அரசுகளுக்கு வழங்க போதுமான நிதியில்லை என்று தெரிவித்தது. ஜிஎஸ்டி வரி வசூல் குறைவாக இருப்பதால், தற்போது இழப்பீடு தொகையை வழங்க முடியாது என்றும்  மத்திய அரசு தெரிவித்தது.  இதனிடையே இன்று மக்களவையில் மத்திய … Read more

#BREAKING: தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி ஒதுக்கீடு.!

15 – வது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், தமிழகத்திற்கு 6-வது தவணையாக ரூ.335.41 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதிகபட்சமாக கேரளா மாநிலத்திற்கு ரூ.1,276.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் விதமாக ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பல மாநிலங்கள் நிதி … Read more

ரூ.1.61 லட்சம் கோடி கடன்களுக்கு வங்கிகள் அனுமதி- மத்திய நிதியமைச்சகம்.!

அவசர உத்தரவாத கடன் திட்டத்தின்  கீழ், சிறு, குறு, மத்திய ரக தொழில்களுக்கு இதுவரை ரூ.1.61 லட்சம் கோடி கடன்களுக்கு வங்கிகள் அனுமதி வழங்கியுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட  பொதுமுடக்கத்தால் பல்வேறு துறைகள் பெரும் சரிவைச் கண்டது. அவற்றை மீட்டெடுக்க கடந்த மே மாதம் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் நிதித் தொகுப்பை “சுயச்சார்பு இந்தியா திட்டம்” என்ற பெயரில் மத்திய அரசு அறிவித்தது. அதில் சிறு, குறு, நடுத்தர … Read more

வங்கி அதிகாரிகளுடன் 3-ம் தேதி மத்திய நிதியமைச்சர் ஆலோசனை

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மூன்று மாதங்களாக மத்திய அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  கொரோனாவால் வங்கிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடன் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பல நெருக்கடிகளை வங்கிகள் சந்தித்துள்ளன. இதில், இருந்து மீண்டுவர ரிசர்வ் வங்கி சமீபத்தில் தீர்வு திட்டத்தை வெளியிட்டு இருந்தது. இந்த தீர்வு திட்டத்தை அமல்படுத்துவதால் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் குறித்து வங்கிகள் மற்றும் … Read more

மாலை 4 மணிக்கு நிதியமைச்சர் செய்தியாளர் சந்திப்பு.!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். பிரதமர் கரீம் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் எடுக்கப்படவுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்க வாய்ப்புள்ளது.

BREAKING: ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டி.வி சேனல்.!

மேலும் 12 டிவி சேனல்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனை சுயசார்பு பாரதம் என்ற பெயரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடந்து 4 நாட்களாக அறிவித்து வருகிறார். நேற்றைய அறிவிப்பில், கனிமங்கள், ராணுவ பாதுகாப்பு தடவாள உற்பத்தி, … Read more

100 நாள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு .!

100 நாள் வேலைத்திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி  ஒதுக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனை சுயசார்பு பாரதம் என்ற பெயரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடந்து 4 நாட்களாக அறிவித்து வருகிறார். நேற்றைய அறிவிப்பில், கனிமங்கள், ராணுவ பாதுகாப்பு தடவாள உற்பத்தி, விமானம், … Read more

#BREAKING: அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய துறைகளில் இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது என்று தெரிவித்தார். அதில் ,அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும்  என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

#BREAKING: விண்வெளித்துறையில் தனியாருக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய துறைகளில் இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது என்று தெரிவித்தார். அதில் , விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் … Read more