BREAKING: ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டி.வி சேனல்.!

மேலும் 12 டிவி சேனல்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனை சுயசார்பு பாரதம் என்ற பெயரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடந்து 4 நாட்களாக அறிவித்து வருகிறார்.

நேற்றைய அறிவிப்பில், கனிமங்கள், ராணுவ பாதுகாப்பு தடவாள உற்பத்தி, விமானம், விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட 8 துறைகளுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டார். தற்போது, இன்று இறுதிக் கட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், பள்ளிக்கல்விக்காக ஏற்கெனவே 3 தொலைக்காட்சி அலைவரிசைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மேலும் 12 டிவி சேனல்கள் தொடங்கப்படும். 1 முதல் 12-ஆம் வகுப்புவரை தனித்தனியாக 12 டிவி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk